• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை சீரழிக்க சீனாவின் பயோ ஆயுதம்.. கொரோனா வைரசை உருவாக்கி, பரப்பினர்.. சீன விஞ்ஞானி பகீர்

Google Oneindia Tamil News

பீஜிங்: சீன ராணுவ விஞ்ஞானிகள் கோவிட் -19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா வைரஸ்களை பயோ ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசித்ததாகவும், மூன்றாம் உலகப் போரை உயிரியல் ஆயுதத்தை கொண்டு செயல்படுத்த சீனா திட்டமிட்டிருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையால் பெறப்பட்ட ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

  Corona-வை உயிரி ஆயுதமாக China பயன்படுத்துகிறது - Dr Li Meng Yan | Oneindia Tamil

  இதை சீனாவைச் சேர்ந்த வைராலஜி விஞ்ஞானி லி மெங் யான், "இந்தியா டுடே" ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

  தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை நுழைய விடமாட்டோம்.. ஆரம்பமே அதிரடி.. கலக்கும் அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை நுழைய விடமாட்டோம்.. ஆரம்பமே அதிரடி.. கலக்கும் அமைச்சர் பொன்முடி

  இதுபற்றி, தற்போது சீனாவிலிருந்து வெளியேறி, பெயர் சொல்லாத இடத்தில் வாழ்ந்து வரும், லி மெங் யான் கூறியுள்ளதை பாருங்கள்:

  அமெரிக்க ஆவணம்

  அமெரிக்க ஆவணம்

  வழக்கமான பயோ ஆயுதங்களை தவிர்த்துவிட்டு கொரோனா வைரஸை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதற்கு சீனா நீண்டகாலமாக திட்டமிட்டு இருந்தது என்பது ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உலகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. நான் மார்ச் மாதம் வெளியிட்ட ஆவணங்கள் மற்றும் நீங்கள் குறிப்பிடும் ஆவணங்கள் இரண்டிலுமே மரபுசாரா வழியில் உயிரி ஆயுதத்தை சீனா எப்படி பயன்படுத்துகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த வைரஸ், ஆய்வகத்தில் இருந்து வெளியாகியதாக, சீனா உலக மக்களுக்கு போலியான வதந்திகளை பரப்பி உள்ளது.

  சீன ராணுவ பின்னணி

  சீன ராணுவ பின்னணி

  சீனா நிறைய முதலீடு செய்து கொரோனா வைரஸ் உருவாக்கத்தை நிகழ்த்தியுள்ளது. மக்கள் ராணுவப்படை ஆய்வகத்தின் மூலமாக இதை வெளியே பரவவிட்டுள்ளது என்பதை கடந்த ஜனவரி மாதம் யூ டியூப் மூலமாக நான் தெரிவித்தேன். மனிதர்களை தாக்க கூடிய வைரஸை கண்டறிந்து வேண்டும் என்று முனைப்பு காட்டியது சீனா. அதில் வெற்றி பெற்றதும், வைரசை வெளியே விட்டுள்ளனர். சீனா இந்த வைரசை எப்படி தடுப்பது என்பதை அறிந்து இருக்கிறது. எனவே தான் முதலில் தடுமாறுவது போல காட்டிக் கொண்டு அதன் பிறகு வேகமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் நாட்டில் நோய் பரவாமல் தடுத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  வூகான் நகரத்தில் டிரையல் நடந்துள்ளது

  வூகான் நகரத்தில் டிரையல் நடந்துள்ளது

  மருத்துவ கட்டமைப்பு சீர்குலைந்து போகவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இந்த வைரஸ் சீனாவால் வெளியிடப்பட்டது என்று சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ஆமாம்.. பயோ ஆயுதம் என்பது மருத்துவ கட்டமைப்பே சீர்குலைப்பதற்காகத்தான் பயன்படுத்தபடுகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக, சீன அதிகாரிகள் சொன்ன விஷயம் இதுதான்: இந்த உயிரி ஆயுதம் அதிகம் பேரை உயிர் இழக்கச் செய்யாது, ஆனால் எதிரிகளின் மருத்துவ கட்டமைப்பை வீழ்த்திவிடும். சமூகத்தை சீரழித்து விடும் என்று கூறியிருந்தனர். இதை அடுத்து வூகான் நகரத்தில் இதற்கான முயற்சிகளை செய்து பார்த்துள்ளது. அந்த நகரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதை, நேரடியாக உணர்ந்து கொண்டது. இதன் பிறகு பிற நாடுகள் பாதிப்பதை சீன பார்த்துக்கொண்டிருக்கிறது என்றார்.

  வதந்தி பரப்புவது சீனா வாடிக்கை

  வதந்தி பரப்புவது சீனா வாடிக்கை


  இந்த தகவல்கள் உண்மை இல்லை என்று சீனாவை சேர்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றனவே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், வைரஸை வெளியே விடும்போது இதுபோன்ற கேள்விகள் வந்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை சீன அரசு தயார் செய்து வைத்துள்ளது. மக்களுக்கு உண்மையை சொல்லக்கூடாது. பொய் தகவல்களை பரப்ப வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  ஆய்வகங்களில் உற்பத்தி

  ஆய்வகங்களில் உற்பத்தி

  2015ம் ஆண்டில் சீன விஞ்ஞானிகள் மற்றும் மக்கள் விடுதலைப் படை ராணுவ கமாண்டர்களிடையே வைரஸ் உருவாக்கம் தொடர்பாக பேசிய பேச்சுக்களுக்கும், 2020ம் ஆண்டு கொரானா வைரஸ் உலகம் முழுக்க தாக்க ஆரம்பித்ததற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு, இந்த அறிக்கை ராணுவத்தின் மருத்துவ இதழில், வெளியாகியுள்ளது. ராணுவ மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இதைப் பயின்று உள்ளனர். உயிரி ஆயுதம் பற்றி அவர்கள் படித்து வந்தனர். இப்போது இதற்கு ஒரு ஆதாரம் நமக்கு கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் நிறைய ஆய்வகங்களை சீன ராணுவம் வாங்க ஆரம்பித்தது. ஆனால் அங்கு வைரஸ் தொடர்பான ஆய்வுகள் அதிகமாக நடந்துள்ளன. கடந்த ஐந்தாறு வருடங்களில் இது தொடர்பாக நல்ல நிபுணத்துவம் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் அதற்கான சான்று. இவ்வாறு விஞ்ஞானி லி மெங் யான் தெரிவித்தார்.

  English summary
  China is using coronavirus as bio weapon and they have intentionally released says Dr.Le-Meng Yan.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X