For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாம ரொம்பதான் உஷாரா இருக்கணும் போல.. குரங்குகூட ‘அந்த’ வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுச்சு

சீனாவில் குரங்கு ஒன்று ஆன்லைனில் ஷாப்பிங் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆன்லைனில் ஷாப்பிங் செய்த குரங்கு

    பிஜிங்: சீனாவில் குரங்கு ஒன்று தனது முதலாளியின் போனில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

    சீனாவின் சாங்சோ நகரில் யான்செங் வன உயிரியல் பூங்கா உள்ளது. அதில் எல்வி மெங்மெங் என்பவர் ஊழியராக உள்ளார். அவர் குரங்கு ஒன்றை ஆசையாக வளர்த்து வருகிறார்.

    china monkey does online shopping with smart phone

    நாளின் பெரும்பாலான நேரம் அந்த குரங்குடன் தான் நேரம் செலவிட்டு வருகிறார் மெங்மெங். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குரங்கு அருகில் இருக்கும் போது தனது செல்போனில் ஆன்லைன் ஷாப்பிங் செயலியில் மெங்மெங் பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தார்.

    முதலில் பொம்மை.. அடுத்து குழந்தையைத் தூக்கி வீசிய டிரைவர்.. வைரலான பஸ் வீடியோவில் புதிய டிவிஸ்ட்!முதலில் பொம்மை.. அடுத்து குழந்தையைத் தூக்கி வீசிய டிரைவர்.. வைரலான பஸ் வீடியோவில் புதிய டிவிஸ்ட்!

    அப்போது அந்த குரங்கு கத்தியதால், அதற்கு பசியாக இருக்கும் என நினைத்து உணவு கொண்டு வருவதற்காக மெங்மெங் வெளியில் சென்றார். தனது செல்போனை அவர் குரங்கு இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, சில பொருட்கள் ஆர்டர் செய்ததற்கான மெசேஜ்கள் போனில் இருந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மெங்மெங், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் தனது போனை எடுத்து குரங்கு நோண்டுவது பதிவாகியிருந்தது. இதையடுத்து, குரங்கு தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்திருக்கிறது என மெங்மெங் உணர்ந்து கொண்டார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த புத்திசாலி குரங்கை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். குரங்கு ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் என்பதால் அதை திருப்பி அனுப்பும் எண்ணம் மெங்மெங்கிற்கு இல்லை என்பது கூடுதல் தகவல்.

    English summary
    In a viral video from China, a monkey does online shopping with its owner's phone. It was caught in the CCTV camera.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X