For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும் திருப்பம்.. ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை.. ஷாக் பின்னணி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ரஷ்யாவில் இருக்கும் நிலப்பரப்பு ஒன்றை சீனா தற்போது உரிமை கொண்டாட தொடங்கி உள்ளது. இதனால் தற்போது ரஷ்யாவிற்கு சீனாவிற்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Russia உடனும் மோதும் China... இனி என்ன நடக்கும்?

    உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் உடன் சீனா மோதலில் இருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், ராணுவ எல்லை ரீதியாகவும் மோதி வருகிறது.

    சீனாவிற்கு இருக்கும் ஒரே நண்பன் ரஷ்யாதான் என்று நிலைமை இருக்கிறது. ஆனால் தற்போது அதே ரஷ்யாவுடன் சீனா மோதலுக்கு சென்று உள்ளது. ஆம், நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள், ரஷ்யாவின் நகரம் ஒன்றை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது.

    சீன எதிர்ப்பை மதிக்காத ரஷ்யா.. ரூ.38,900 கோடியில் இந்தியாவிற்கு வரும் போர் விமானம், ஏவுகணை சிஸ்டம்சீன எதிர்ப்பை மதிக்காத ரஷ்யா.. ரூ.38,900 கோடியில் இந்தியாவிற்கு வரும் போர் விமானம், ஏவுகணை சிஸ்டம்

    என்ன செய்ததது

    என்ன செய்ததது

    ரஷ்யாவில் இருக்கும் நகரமான விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது. இந்த இடம் முதலில் சீனாவின் கட்டுப்பாட்டில் 1600களில் இருந்தது. ஆனால் அதன்பின் நடந்த இரண்டாம் ஓபியம் போரில் சீனா தோல்வி அடைந்தது. இதில் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. அதன்பின் 1860ல் செயயப்பட்ட ஒப்பந்தம் மூலம் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை அதிகாரபூர்வமாக ரஷ்யா தன்வசப்படுத்தியது.

    ஆனால் தற்போது

    ஆனால் தற்போது

    ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது. அதோடு தற்போது விளாடிவோஸ்டோக் தங்களுக்குத்தான் சொந்தமென்று சீனா மோத தொடங்கி உள்ளது. சீனாவின் ஓநாய் வீரர்கள் இப்போதே ரஷ்யாவிற்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 160 வருடமாக ரஷ்யாவிடம் இந்த விளாடிவோஸ்டோக் சட்ட ரீதியாக இருக்கிறது.

    ஆண்டு விழா

    ஆண்டு விழா

    ரஷ்யாவில் விளாடிவோஸ்டோக் இணைந்ததற்கான ஆண்டு விழாவை அந்த நாடு சில நாட்கள் முன் கொண்டாடியது. இதனால்தான் தற்போது விளாடிவோஸ்டோக் மீது சீனா கண் வைக்க தொடங்கி உள்ளது. இந்த நிலம் எங்களுக்கு சொந்தம். ரஷ்யா இதையே அபகரித்து விட்டது. இதை மீண்டும் ரஷ்யா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா பிரச்சாரம் செய்து வருகிறது.

    பெரிய அதிர்ச்சி

    பெரிய அதிர்ச்சி

    சீனாவின் இந்த செயலால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனாவை அனைத்து இக்கட்டான சூழ்நிலையிலும் ரஷ்யா உதவி செய்துள்ளது. கொரோனா சமயத்தில் கூட ரஷ்யா சீனா மீது புகார் வைக்கவில்லை . அதேபோல் அமெரிக்கா எப்போது மோதினாலும் அப்போதெல்லாம் ரஷ்யாதான் சீனாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. தற்போது அதே ரஷ்யாவை சீனா முதுகில் குத்தி உள்ளது.

    சீனா ஏன் இப்படி ?

    சீனா ஏன் இப்படி ?

    ஏற்கனவே சீனா தனது எல்லையில் 14 நாடுகள் உடன் மோதலை கடைபிடித்து வருகிறது. அதிலும் எல்லையை பகிராத நாடுகள் உடனும் கூட சீனா மோதி வருகிறது. மொத்தம் 21 நாடுகள் உடன் சீனா இப்படி மோதி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவையும் சீனா எதிர்த்து வருகிறது. இதனால் உலக அளவில் சீனா விரைவில் தனிமைப்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    China now claiming a city in Russia after border row with 21 countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X