For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறை உட்பட அனைத்து இஸ்லாமிய சின்னங்களையும் நீக்குக.. சீனாவில் அரசு புதிய கெடுபிடி.. பகீர் காரணம்!

சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களையும் நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    China ordered muslims | இஸ்லாமுக்கு சீனாவில் அரசு புதிய கெடுபிடி.. பகீர் காரணம்!- வீடியோ

    பெய்ஜிங்: சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களையும் பொது இடத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனாவும் ஒரு முக்கியமான நாடு ஆகும். அங்கு மொத்த மக்கள் தொகையில் தற்போது 20 மில்லியன் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.

    ஆசியாவில் பல நாடுகளில் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்பட்டு வந்தாலும் சீனாவில் இத்தனை நாட்கள் நல்ல நிலையில்தான் நடத்தப்பட்டு வந்தனர். ஆனால் அதற்கும் தற்போது பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    சீனாவில் இஸ்லாமிய மதத்திற்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் அனைத்து சின்னங்களை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்லாமியர்களின் கடைகளில் இருக்கும் பிறை முத்திரை, மசூதி முத்திரைகளை நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் இனி இந்த முத்திரைகள் இருக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் ஹோட்டல்களில் அரபிக் எழுத்துக்களில் ஹலால் என்று எழுதப்பட்டு இருக்க கூடாது என்றும் கூறியுள்ளது. ஹலால் உணவு என்று ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும்படி பொதுவில் எழுதுவது தவறு என்று கூறியுள்ளது. இதனால் அங்கு இருக்கும் ஹோட்டலில் ஹலால் முத்திரை நீக்கப்பட்டு வருகிறது.

    என்ன மசூதிகள்

    என்ன மசூதிகள்

    அதேபோல் இஸ்லாமிய நாடுகளில் இருப்பதை போல கூம்பு வடிவம் கொண்ட வகையில் மசூதிகள் இனி கட்டுவதை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 2016லேயே அந்நாடு இஸ்லாமியா மதத்திற்கு எதிராக இது போன்ற சிறிய சிறிய நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்போது அது உச்சம் அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    அதன்படி சீனாவில் இஸ்லாம் மதம் மட்டுமில்லாமல் கிறிஸ்துவமும் இதேபோல் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் புத்தமதம் தவிர்த்து மற்ற மதங்களை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்க அரசு முயல்வதாக புகார் எழுந்துள்ளது. சீனாவிற்கும் இந்த மதங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதால் இது போல நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் பகீர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Shocking : China ordered to take down all Muslim Symbols from public places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X