For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெல்த்.. ரேடாரில் சிக்காத "ஜெ -20" வகை விமானம்.. மொத்தமாக தயாரிக்க போகும் சீனா.. பகீர் திட்டம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனா தற்போது தனது சுயநாட்டு தயாரிப்பான ஜெ -20 வகை ஸ்டெல்த் போர் விமானங்களை வேகமாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதாவது மொத்தமாக ஒரே வருடத்தில் நிறைய விமானங்களை தயாரிக்க சீனா முடிவு செய்துள்ளது.

Recommended Video

    China தயாரிக்கும் அதிநவீன stealth fighter J-20 விமானம்

    ஸ்டெல்த் போர் விமானம் என்பது எதிரி நாட்டின் ரேடாருக்குள் செல்லாமல் தப்பித்து, அந்த நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் திறமை கொண்டது. அதாவது ரேடாரின் கதிர்களை திருப்பி அனுப்பாமல், அதை சிதற வைத்து, ரேடாரை குழப்பி அதன் மூலம் எதிரிகளின் கண்ணில் மண்ணை தூவும் திறன் கொண்டதுதான் ஸ்டெல்த்.

    இன்னும் சில விமானங்கள் வேறு விதமான கதிர்களை திருப்பி அனுப்பி ரேடார்களை குழப்பி, எதிரி கண்ணில் சிக்காமல் செல்லும். அமெரிக்கா உருவாக்கிய எப்117 நைட்ஹாக் விமானம்தான் உலகின் முதல் ஸ்டெல்த் போர் விமானம் ஆகும்.

    சீனா உருவாக்கியது

    சீனா உருவாக்கியது

    இதேபோல் ரேடாரில் சிக்காமல் செல்லும் வகையில் சீனாவும் ஸ்டெல்த் விமானங்களை உருவாக்கி உள்ளது. சீனா உருவாக்கிய முதல் ஸ்டெல்த் விமானம் ஜெ -20 (J-20) ஆகும். தற்போது இதை அப்டேட் செய்து சீனா இதன் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தை களமிறக்க உள்ளது. ஜெ -20பி (J-20B) என்ற பெயரில் புதிய அப்டேட் செய்யப்பட்ட ஸ்டெல்த் விமானத்தை சீனா களமிறக்க உள்ளது. இந்த வருட இறுதிக்குள் 100க்கும் அதிகமான ஜெ -20பி (J-20B) யை தயாரிக்க சீனா முடிவு எடுத்துள்ளது.

    அறிமுகம் செய்தது

    அறிமுகம் செய்தது

    இந்த அப்டேட் செய்யப்பட்ட ஜெ -20பி (J-20B) விமானம் கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவின் மத்திய மிலிட்டரி கமிஷன் மீட்டிங்கில் இந்த விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய ஜெ -20 (J-20) ஸ்டெல்த் வகை என்றாலும் அது ரேடாரில் சிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த ஜெ -20பி (J-20B) முழுமையாக ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது. கண்டிப்பாக ரேடாரில் சிக்காது என்று சீனா கூறுகிறது.

    எஞ்சின் மாற்றம்

    எஞ்சின் மாற்றம்

    இந்த ஜெ -20பி (J-20B) விமானத்தில் டிவிசி எஞ்சின் என்ற புதிய வகை எஞ்சின் வைக்க உள்ளனர். அதிக திறன் மற்றும் சக்தி கொண்டது டிவிசி (Thrust vector control - TVC) ஆகும். சீனாவின் ஜி10சி போன்ற போர் விமானங்கள் இந்த டிவிசி எஞ்சின் கொண்ட விமானங்கள் ஆகும். சீனாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எஞ்சின் ஆகும் இது. இது அதிக திறன் கொண்டது.

    இப்போது முடியாது

    இப்போது முடியாது

    ஆனால் இப்போது ஜெ -20பி (J-20B) விமானத்தில் இந்த டிவிசி எஞ்சினை வைக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். டிவிசி எஞ்சின் அதிக திறன் கொண்டது. அதே சமயம் இது வெடிக்கும் ஆபத்தும் உள்ளது. இதனால் ஸ்டெல்த் உற்பத்தியில் டிவிசி எஞ்சினை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது. அதனால் பழைய எஞ்சின்களையே இதில் பயன்படுத்தலாம் என்று சீனா முடிவு செய்துள்ளது.

    தாமதம் ஆனது

    தாமதம் ஆனது

    கடந்த வருடம் சீனா மொத்தமாக ஜெ -20 (J-20) வகை விமானங்கள் 50ஐ உருவாக்க திட்டமிட்டது. ஆனால் அப்போது பல்வேறு காரணங்களால் இதை உருவாக்க முடியவில்லை. முக்கியமாக இதற்கான எஞ்சினை சீனாவால் உருவாக்க முடியவில்லை. இதனால் அப்போது சீனாவால் இந்த ஸ்டெல்த் விமானத்தை தயாரிக்க முடியவில்லை. இதனால் தற்போது இதை ஜெ -20பி (J-20B) என்று சீனா அப்டேட் செய்துள்ளது.

    ஏன் இப்படி அவசரம்

    ஏன் இப்படி அவசரம்

    இன்னொரு பக்கம் அமெரிக்கா தனது F-35 ஸ்டெல்த் வகை விமானங்கள் 134ஐ கடந்த வருடம் உருவாக்கியது. இதை உலக நாடுகளுக்கு அமெரிக்கா விற்க உள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு அமெரிக்கா விற்க இருக்கிறது. சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்த செயலை செய்கிறது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா தற்போது ஜெ -20பி (J-20B) தவிப்பில் களமிறங்கி உள்ளது.

    English summary
    China plans for the mass production of Stealth J -20 this year as a counter to India and The US.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X