For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவை சீண்டும் அமெரிக்கா.... போருக்கு தயாராக சொன்ன அதிபர் ஜி ஜின்பிங்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன ராணுவம் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். தைவான் பிரச்னையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது.

தைவான் சுதந்திர நாடு என பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பகுதியே தைவான் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

China President xi jinping has ordered that the army be ready for war

ஆனால், தைவானின் பாதுாப்புக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் சீனாவிற்கு கடுப்பை ஏற்றிவிட்டது.

இந்தநிலையில், சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜின் பிங், மிக வேகமாக நவீனமாகி வரும் சீன ராணுவம், போருக்கும், எத்தகையதொரு நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க உள்ள நிலையில் மீண்டும் மோதல் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
President Xi Jinping has ordered that the army be ready for war. US President Trump signed on the Taiwan issue. The Chinese have condemned it and put troops in position.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X