For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர் மாற்றம்.. கொரோனா வைரஸ் பாதித்த வுகான் நகருக்கு முதல்முறையாக சென்ற சீன அதிபர்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வுஹான் நகருக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்னர் முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார். அங்கு மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

Recommended Video

    Corona Vaccine : நம்பிக்கையூட்டும் தமிழர்... ஆய்வு பணிகள் தீவிரம்

    கடந்த டிசம்பர் மாதம் வுஹானில் கொரோன வைரஸ் உருவான நிலையில்,இதுவரை அந்த நாட்டில் 3100 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் படிப்படியாக தற்போது பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்த இடத்தில் உள்ள லி கெக்கியாங் தேசிய அளவில் வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு குழுவை வழிநடத்தி வருகிறார். இவர் தான் கடந்த ஒரு மாதத்திற்க முன்பு அதாவது கடந்த ஜனவரிடி 27ம் தேதி வுகானுக்கு சென்று வந்தார்.

    100 நாடுகளில்

    100 நாடுகளில்

    கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, தென்கொரியா, ஈரான். ஜப்பான் உள்பட சுமார் 100 நாடுகளில் வேகமாக பரவிவிட்ட நிலையில் கொரோனா வைரஸால் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

    இந்தியாவிலும் பரவல்

    இதைதடுக்க வழிகள் தெரியாமல் சீனாவை போல் உலகின் அனைத்து நாடுகளுமே திணறி வருகின்றன. குறிப்பாக இத்தாலி, ஈரானில் சீனாவைப் போல் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் 100க்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    60 ஆயிரம் பேர் குணம்

    60 ஆயிரம் பேர் குணம்

    ஆனால் சீனாவில் எவ்வளவு வேகமாக பரவியதோ அதே வேகத்தில் தடுக்கப்பட்டு வருகிறது. அங்கு விழிப்புணர்வு அதிகரித்ததன் விளைவாக தற்போது குறைவான மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்பும் வேகமாக குறைந்து வருகிறது. சுமார் 40 ஆயிரம் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்னும் பலர் குணம் அடையும் நிலையில் இருக்கிறார்கள்

    சீன அதிபர் ஜின்பிங்

    சீன அதிபர் ஜின்பிங்

    இதனால் சீனாவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் வுகான் நகருக்கு முதல் முறையாக இன்று சென்றார். அங்கு கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஜின்பிங் அப்போது பேசினார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் உற்சாகப்படுத்தி பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

    English summary
    china President Xi Jinping on Tuesday visited patients and medics at Huoshenshan Hospital after arriving in Wuhan, the epicenter of the #COVID19 outbreak.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X