For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடு நனையுதேனு ஓநாய் மட்டும் அழலை.. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும் ஒப்பாரி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஆடு நனையுதேனு ஓநாய் அழுத கதையால்ல இருக்கு... என பழமொழி கூறுவதுண்டு. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா, தாம் காஷ்மீரில் ஆக்கிரமித்துள்ள அக்சய் சின் நிலை குறித்தும் ஐநா சபையில் கேள்வி எழுப்பி எழுப்பியது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 5- ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளன. இதன்னையடுத்து தாம் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரையும் இந்தியா கைப்பற்றிவிடுமோ என்கிற அச்சத்தால் இந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எதிர்த்தது.

இதன் எதிரொலியாக உலக நாடுகளிடம் காஷ்மீருக்கு நியாயம் கேட்க போய் மூக்கு உடைபட்டு நிற்கிறது பாகிஸ்தான். இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் முறையிட்டது. பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனாவும் இதற்கு ஒத்து ஊதியது.

காஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சுகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு

மூக்கை நுழைத்த சீனா

மூக்கை நுழைத்த சீனா

ஆனால் இருவரது முகத்தில் கரியை பூசும்படியாக காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ஏதோ பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மட்டும் சீனா மூக்கை நுழைக்கவில்லை.

யாருக்கு சொந்தம்

யாருக்கு சொந்தம்

லடாக் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வைத்திருக்கும் அக்சய்சின் என்கிற காஷ்மீர் பகுதியையும் இந்தியா கைப்பற்றலாம் என அந்நாடு அஞ்சுகிறது. அதனால்தான் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு காஷ்மீருக்காக ஒப்பாரி வைக்கிறது சீனா.

கேள்வி

கேள்வி

தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியை இந்தியா யூனியன் பிரதேசங்களாக அறிவித்துவிட்டது. ஏற்கனவே அனைத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளையும் இந்தியாவுடன் இணைப்போம்; இதற்காக உயிரையும் கொடுப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரகடனம் செய்திருக்கிறார். இதனால்தான் சீனா நடுங்கிப் போய் அக்சய்சின் குறித்தும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கேள்வி எழுப்பியது.

சீனா எழுப்பியது

சீனா எழுப்பியது

மேலும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் கூறுகையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றி அமைத்துவிட்டதால் இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சீனாவுக்கு சொந்தமான பகுதிகளை இந்திய அரசு சொந்தம் கொண்டாடாது என தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த விவகாரத்தை அச்சத்துடன் சீனா எழுப்பியது.

English summary
China not only raised Kashmir issue to back Pakistan, it also raked up Aksai Chin of Ladakh which was illegally occupied by Beijing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X