For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிக்கிமை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கும் சீன ஊடகங்கள்!

சிக்கிமை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்த சீன ஊடகங்கள் முயற்சிப்பதாக அம்மாநில எம்.பி. பிடி ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

காங்டாங்: சிக்கிமை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்த சீன ஊடகங்கள் மும்முரம் காட்டுவதாக சிக்கிம் ஜனநாயக கட்சி எம்.பி. பி.டி. ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

சிக்கிம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பியான பி.டி. ராய் அம்மாநில நிலவரம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதி வருகிறார். இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பி.டி. ராய் எழுதியுள்ளதாவது:

China raking up Sikkim merger issue

சிக்கிம் மக்களைப் பொறுத்தவரையில் எல்லையில் யுத்தம் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். சீனாவோ, இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை சிக்கிமில் தூண்ட முயற்சிக்கிறது.

கிளறப்படும் இந்திய எதிர்ப்பு

இந்தியாவின் ஒரு அங்கமாக சிக்கிம் இருக்கும் நிலையில் சீன ஊடகங்கள் இந்திய எதிர்ப்பு உணர்வுகளை கிளறுகிறது. 1967-ம் ஆண்டு முதல் சிக்கிம் எல்லைகள் அமைதியாகவே இருந்து வருகிறது.

Recommended Video

    A Video Clip on the Chinese army forcibly entered in Sikkim border-Oneindia Tamil

    காலச்சக்கரம் சுழலாது

    சிக்கிம் இந்தியாவின் ஒருபகுதிதான் என்பதை சீனா 2003-ம் ஆண்டு ஒப்புக் கொண்டுவிட்டது. சிக்கிமில் தேசியவாதிகள் என தங்களை அடையாளப்படுத்துவர்கள் இருந்தாலும் கூட காலச்சக்கரம் சுழலப் போவதில்லை.

    அமைதி தவழும் சொர்க்கம்

    இந்த தகவலைத்தான் சிக்கிம் மக்கள் சீனாவுக்கு சொல்கிறோம். இந்தியாவின் 22-வது மாநிலமாக அமைதி தவழும் சொர்க்கமாக சிக்கிம் திகழ்கிறது.

    371F பிரிவு

    இந்திய அரசியல் சாசனத்தின் 371F பிரிவானது சிக்கிம் மக்களுக்கு சிறப்பு உரிமைகளையும் சலுகைகளையும் அளித்துள்ளது. இதை மிக முக்கியமான ஒன்றாக நாங்கள் பார்க்கிறோம்.

    எல்லைகளில் அமைதி சிதைவு

    இந்தியாவின் நீண்டகால முதல்வர்களில் ஒருவராக சிக்கிம் ஜனநாயக கட்சியின் சாம்லிங் திகழ்ந்து வருகிறார். இப்போது சிக்கிமின் எல்லைகளில் அமைதி சிதைக்கப்பட்டு வருகிறது.

    சீறும் சீனா டிராகன்

    எங்களது தென்பகுதியில் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை எழுந்துள்ளது. வடக்குப் பகுதியில் சீன டிராகன் சீறிக் கொண்டிருக்கிறது. இந்தியா-திபெத்- பூட்டானின் முச்சந்திப்பு பகுதியான டோக்லாமில் பதற்றம் நீடிக்கிறது.

    உள்நாட்டு பிரச்சனைக்கு தீர்வு

    சிக்கிம் முன்னேறிய மாநிலமாக நன்கு வளர்ச்சியடைந்த மாநிலமாக இருப்பதற்கு காரணமே இந்திய அரசியல் சாசனத்தின் 371F பிரிவுதான்... கோழிக் கழுத்து பகுதியில் இருக்கும் நமது உள்நாட்டு பிரச்சனைகளை விரைவாக தீர்க்கப்பட வேண்டும்.

    அமைதிதான் முக்கியம்

    டோக்லாம் முச்சந்திப்பின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா நன்கு உணர்ந்திருப்பதால் தெற்கே இன்னும் சற்று முன்னேற முயற்சிக்கிறது. என்ன விலை கொடுத்தேனும் இதை அனுமதிக்கவே கூடாது. அதற்கு முன்னதாக உள்நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு சிக்கிமின் மனநிலையை பி.டி. ராய் விவரித்துள்ளார்.

    English summary
    Sikkim MP PD Rai slammed that the Chinese press raking up the Sikkim’s merger with India issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X