For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சீனாவை புறக்கணிப்போம்' பிரச்சாரத்தால் அதிர்ச்சி.. இதுவேற அது வேற.. கெஞ்சும் சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கடந்த திங்கள்கிழமை கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இதனால் பொங்கி எழுந்த மக்களால் தேசம் முழுவதும் 'சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என்ற பிரச்சாரம் வலுப்பெற்றுள்ளது. இந்த பிரச்சாரத்தால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது.

Recommended Video

    எந்த China Product - ஐ புறக்கணிக்கலாம்? Google-ல் தேடிய இந்தியர்கள்

    முதன் முதலாக சீனாவிற்கு எதிரான புறக்கணிப்பு குரல்கள் லடாக்கில் இருந்து தான் வந்தன. லடாக்கில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், சீன தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.

    'சீனாவைப் புறக்கணிக்கவும்', சீன பொருட்களை புறக்கணிப்போம், வேண்டாம் சீனா என்ற முழக்கங்களை அவர் தொடங்கினார், இது இப்போது நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

    மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை.. ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை.. ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு

    சீன ஊடகங்கள்

    சீன ஊடகங்கள்

    சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற ' பிரச்சாரத்தால் சீனா கவலை அடைந்துள்ளது. இந்தியர்களின் இந்த செயலை கைவிட வேண்டும் என சீன ஊடகங்களில் கட்டுரைகள் மற்றும் கருத்துகள் பெரு வெள்ளம் போல் வழிந்தோடுகிறது. சீன ஊடகங்களில் வெளியான கட்டுரைகளில், இந்தியர்கர்கள் இப்படி ஒரு ‘தீவிர நடவடிக்கையை' நாட வேண்டாம் என்று கோரியுள்ளன. சீனாவுடனான இந்தியர்களின் உறவுகள் பல நூற்றாண்டுகளாக உள்ளதாக கூறி ஊடங்கள் கதறுகின்றன

    தேசிய உணர்வு

    தேசிய உணர்வு

    சீன தொழில நிறுவனங்களுடன் இணைந்து தொழில்களை நடத்தி வந்த இந்தியர்கள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்து வருவது சீனாவின் கவலை அதிகரித்துள்ளது. இந்தியர்களிடையே தேசிய உணர்வு மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்க முக்கிய காரணம். முள் கம்பியை சுற்றிய கம்பிகளால் ராணுவ வீரர்களை சீனா திட்டமிட்டு அடித்து கொன்றுவிட்டதை ஏற்க முடியவில்லை. சீனாவின் செயல் அநியாயமானதாக பார்ப்படுவதால் அந்த நாட்டிற்கு எதிராக மொத்த இந்திய மக்களும் தேசிய உணர்வோடு திரும்பி உள்ளனர்.

    வளர்ச்சி வாய்ப்பு

    வளர்ச்சி வாய்ப்பு

    இதற்கிடையே சீன சமூக அறிவியல் அகாடமியின் கீழ் உள்ள தேசிய சர்வதேச யுக்தி கழகத்தின் இணை ஆராய்ச்சியாளரான லியு சியாவாக், சீனாவின் அனைத்து சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் இதுபற்றி சில விஷயங்களை எழுதி உள்ளார். "எல்லையில் புதிய பதட்டங்களை மதிப்பிடும்போது, சீனாவின் கட்டுப்பாடு பலவீனமாக இல்லை. என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். எல்லை மோதலுக்குப் பிறகு ‘சீனாவைப் புறக்கணித்தல்' குரல்களை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். எல்லைப் பிரச்சினைகளை முதலீடுகள் மற்றும் வர்த்தகத்துடன் கண்மூடித்தனமாக இணைப்பது நியாயமற்றது. கொரோனா தொற்று பரவி நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், இரு தரப்பினரும் விலைமதிப்பற்ற வளர்ச்சி வாய்ப்புகளை மதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    கொரோனா தொற்று

    கொரோனா தொற்று

    மேலும் உலகளாவிய பொருளாதாரத்தில் தொற்றுநோயால் ஏற்பட்ட அழுத்தங்கள் மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் அதனால் ஏற்பட்ட அதிக பாதிப்பு ஆகியவற்றை கட்டுரையில் நினைவுபடுத்தியுள்ள லியு சியாவாக், "எல்லை பதட்டங்கள் அதிகரித்து பாதகமான சூழல்கள் அதிகரித்தால், முதலீடு திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

    English summary
    India should curb ‘boycott China’ voices after border clash: globel times
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X