
இதென்ன புது கேம்? இந்தியா, சர்வதேசத்துடன் இணைந்து இலங்கைக்கு உதவ ரெடி என வெடியை கொளுத்தும் சீனா!
பெய்ஜிங்: இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மாணவி.. பப்.. எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்.. இந்தியாவையே உலுக்கிய கூட்டு வன்புணர்வு! கொடூர பின்னணி!
இலங்கையின் மிகப் பெரிய பொருளாதாரப் பேரழிவு அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருக்கிறது. இலங்கையின் அரசியல் நிலைமையும் தலைகீழாக மாறிவிட்டது. மக்களின் இடைவிடாத போராட்டங்களால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தற்போது ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகி உள்ளார். நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு நியமன எம்.பி.யை கொண்டது ஐக்கிய தேசியக் கட்சி. அக்கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான ரணிலை பிரதமராக்கி உள்ளது இலங்கை. மகிந்த ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியா உதவி
அண்டை நாடான இலங்கையின் இந்த துயரத்தைத் துடைக்க இந்தியா மிகப் பெரிய கடனுதவிகளை வழங்கி வருகிறது. இலங்கைக்கு பல்லாயிரம் கோடி கடனுதவிகளை கொடுத்திருக்கிறது இந்தியா. இந்தியாவின் கடனுதவியால்தான் இலங்கை பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வாங்கி பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தியா இல்லாமல் போனால் இலங்கை நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியாது.

ஜப்பான், சீனா
இந்தியாவைப் போல ஜப்பானும் ஏராளமான நிதி உதவி வழங்குகிறது. இலங்கைக்குப் பெருமளவு கடன் கொடுத்த சீனா, அதை வசூலிப்பதில் கறார் காட்டுகிறது. அப்படி கடனை இலங்கை திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் நிலையில் இலங்கையின் பல பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்து தர வேண்டிய நெருக்கடியும் உள்ளது. இதனால் சீனாவுக்கு இலங்கையில் மிகக் கடுமையான எதிர்ப்பும் நிலவுகிறது.

பல்டி அடிக்கும் சீனா
இந்தியா தற்போது உதவி செய்வதல் இலங்கை மக்கள், இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட சீனா, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு உதவ தயார் என புது கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய நிலைப்பாடு
மேலும் சீனாவுக்கான கடன் விவகாரங்கள் தொடர்பாக இலங்கையுன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இலங்கையால் தற்போது கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கான பொருளாதார உதவிகளை சீனா வழங்க முடிவு செய்துள்ளது என்கிறார் ஜாவோ லியான்.