சீனாவில் கொரோனா புதிய அலை.. கொத்துக் கொத்தாக பரவுகிறது.. ஏப்ரலுக்கு பின் மிகப்பெரிய ஸ்பைக்!
பெய்ஜிங் : சீனாவில் இன்று ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இப்போது தான் மிகமிக அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாநிலங்களில் கொரோனா கொத்துக்கொத்தாக பரவி இருக்கிறது. எனவே சீனாவில் இந்த பாதிப்பு புதிய கொரோனா அலை பற்றிய அச்சத்தை மக்களிடையே தூண்டியிருக்கிறது.
சீனாவில் கொரோனா பாதிப்பு டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் வரை கடுமையாக உச்சம் பெற்றது. ஆனால் அதன்பிறகு கட்டுப்பாட்டில் வந்ததாக சீனா அறிவித்தது. ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு வந்தது.
அதன்பிறகு புதிய தொற்றுகள் இல்லை என அறிவித்து ஊரடங்கை தளர்த்தியது. பள்ளிகள் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் இயங்க தொடங்கின. சீனாவில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.
விசித்திரமான நடவடிக்கைகள்... இது யார் கொடுத்த ஐடியா...? தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது..?

கொத்தாக பரவல்
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நாளில் 61 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 57 கேஸ்கள் சீனாவிற்கு உள்ளேயே பரவியது ஆகும். இதில் பெரும்பாலான கேஸ்கள் சீனாவின் வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் கண்டறியப்பட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு பிராந்திய தலைநகரான உரும்கியில் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் திடீரென பரவ தொடங்கியது. கொத்துக்கொத்தாக பரவ ஆரம்பித்துள்ளது.

வடகொரியா அருகே
இதேபோல் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கிலும் பதினான்கு பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் டேலியன் நகரில் புதிதாக கொத்துக்கொத்தாக பரவ ஆரம்பித்துள்ளது. வட கொரிய எல்லைக்கு அருகிலுள்ள அண்டை மாகாணமான ஜிலினில் புதிதாக இரண்டு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாதத்திற்கு பிறகு முதல்முறையாக பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சீனாவில் பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் சீனாவில் தொற்று அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு இன்று தான் புதிய வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. துறைமுக நகரமான டேலியனில் கொத்துக்கொத்தாக பரவுவதால் லட்சக்கணக்கான மக்களுக்கு சீன அதிகாரிகள் கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்..

ஊரடங்கு அறிவிப்பு
ஜின்ஜியாங் மாகணத்தில் உள்ள உரும்கியில் இரண்டாவது அலை பரவி விட்டதா என்பதற்கான சோதனை தொடங்கப்பட்டுள்ளது. 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ள அந்த நகரத்தில் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேலியன் மற்றும் உரும்கி ஆகிய இரு நகரங்களிலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "போர்க்கால நிலமை" என்று இரு ஊர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜின்ஜியாங் மாகாணத்தில் கிளஸ்டரின் தோற்றத்தை நிபுணர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இன்றுவரை 178 பேரை பாதித்துள்ளது.

சீனாவில் பாதிப்பு
சீனாவில் 302 பேர் அறிகுறியற்ற நோயாளிகள் ள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர், தற்போது சீனா முழுவதும் கொரோனா நோயால் 331 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், 21 பேர் மோசமான நிலையில் உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.