For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ இதுதான் கொடூர கொரோனா வைரஸா? இப்படித்தான் இருக்குமா!.. சீனா வெளியிட்ட பகீர் புகைப்படம்!

சீனா தொடங்கி உலகம் மொத்தத்தையும் அச்சுறுத்தி வரும் கொடூரமான கொரோனா வைரசின் புகைப்படத்தை சீன அரசு முதல்முறையாக வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனா எதையோ மறைக்கிறது.. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !

    பெய்ஜிங்: சீனா தொடங்கி உலகம் மொத்தத்தையும் அச்சுறுத்தி வரும் கொடூரமான கொரோனா வைரசின் புகைப்படத்தை சீன அரசு முதல்முறையாக வெளியிட்டு இருக்கிறது.

    சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

    இந்த கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 83 பேர் பலியாகி உள்ளனர். 2013 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் 11 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 7 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

     கொரோனா படுத்தும்பாடு.. மருத்துவ கண்காணிப்பில் சீனா சென்று வந்த இரு பெங்களூர்வாசிகள் கொரோனா படுத்தும்பாடு.. மருத்துவ கண்காணிப்பில் சீனா சென்று வந்த இரு பெங்களூர்வாசிகள்

    புகைப்படம்

    புகைப்படம்

    இந்த நிலையில் கொரோனா வைரசின் புகைப்படத்தை சீனா முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சீனாவின் தேசிய மைக்ரோபயலாஜி டேட்டா சென்டர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வைரஸ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களும் வேண்டுமானால் இது குறித்து ஆராய்ச்சி செய்யலாம் என்பதற்காக இந்த புகைப்படத்தை வெளியே விட்டுள்ளனர்.

    மற்ற நாடுகள் எப்படி

    மற்ற நாடுகள் எப்படி

    மற்ற நாடுகளும் கூட இதில் ஆய்வு நடத்த விரும்பினால் நடத்தட்டும். வெளிநாடுகள் உதவ விரும்பினால் உதவட்டும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த வைரசின் அளவு இதில் 100 நானோ மீட்டர் அளவில் உள்ளது. இதன் சீரியல் நம்பர் NPRC 2020.00001 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் வெளியே விட்டுள்ளனர் .

    ஜனவரி 6ம் தேதி

    ஜனவரி 6ம் தேதி

    ஜனவரி 6ம் தேதி எடுக்கப்பட்ட வைரஸ் ஆகும் இது. இந்த வைரஸ் எடுக்கப்பட்ட இருவரும் அடுத்த சில நாட்களில் பலியானது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நினைத்ததை விட அதிக வலுவானதாக இருக்கிறது. இதை உலக நாடுகள் ஆராய்ச்சி செய்யலாம். அவர்கள் எங்களிடம் வைரஸ் மாதிரி வேண்டும் என்று கேட்டால் அதை கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர்கள் அதில் ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடிக்கலாம் என்று சீனா கூறியுள்ளது.

    வைரஸ் வடிவம்

    வைரஸ் வடிவம்

    இந்த வைரஸ் வட்ட வடிவத்தில் இருக்கிறது. பொதுவாக ஒரு கொரோனா வைரஸ் இருக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே இன்னொரு கொரோனா வைரஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் மூன்று கொரோனா வைரஸ் செல்கள் இருந்தாலே அவர்களின் உயிருக்கு ஆபத்து என்று சீனா குறிப்பிட்டுள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிப்பது மிக மிக கடினம். இன்னும் 5 மாதங்களாவது இதற்கு மருந்து கண்டுபிடிக்க ஆகும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    China releases the first-ever Microscopic pic of Coronavirus which extracted from two patients.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X