For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா.. இந்த முறை வேறுவடிவம்.. கைகொடுக்கும் புதிய பரிசோதனை முறை

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஒரே நாளில் 40 அறிகுறியற்ற தொற்றுகள் உட்பட 51 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை தொற்றுநோய்களின் முதல் மைய மையமான வுஹானில் உள்ளன, அங்கு கடந்த 10 நாட்களில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

Recommended Video

    அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா..

    ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ள 51 கேஸ்களில் 11 வெளிநாடுகளில் இருந்து வந்தது என்று சீன நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளது.

    சீனாவில் ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டில் பரவும் புதிய கொரோனா கேஸ்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், உள் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் 10 மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் ஒரு கேஸ் உட்பட 11 இறக்குமதி செய்யப்பட்ட கேஸ்கள் பதிவாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தனது தினசரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வெளியானது மண்டலவாரியான பாதிப்பு.. ராயபுரம் முதலிடம்.. சென்னையில் எங்கு கொரோனா குறைவு தெரியுமா?வெளியானது மண்டலவாரியான பாதிப்பு.. ராயபுரம் முதலிடம்.. சென்னையில் எங்கு கொரோனா குறைவு தெரியுமா?

    வுஹானில் அறிகுறியற்ற நோயாளிகள்

    வுஹானில் அறிகுறியற்ற நோயாளிகள்

    40 புதிய அறிகுறியற்ற கேஸ்களில், 38 வுஹானில் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை 1.12 கோடிக்கும் அதிகமான மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
    தற்போது, ​​அறிகுறியற்ற நோயாளிகள் 396 பேர் சீனாவில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர், இதில் வுஹானில் மட்டும் 326 பேர் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

    தொண்டை புண் இல்லை

    தொண்டை புண் இல்லை

    நோயாளிகளுக்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்த அதே சமயம், காய்ச்சல், இருமல் அல்லது தொண்டை புண் போன்ற அறிகுறிகளை கொரோனா அவர்களுககு உருவாக்கவில்லை. இருப்பினும், அவை மற்றவர்களுக்கு இந்த நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

    நோயாளிகளை கண்டறிய

    நோயாளிகளை கண்டறிய

    முன்னதாக ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 50,000 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்பு இருந்த வுஹானில், மே 14 அன்று நியூக்ளிக் அமில பரிசோதனையை விரிவுபடுத்துவதற்காக ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது அறிகுறியற்ற நோயாளிகளின் எண்ணிக்கையை நன்கு அறிய அல்லது வைரஸை கடத்தும் திறன் உடைய அதேநேரம் தெளிவான அறிகுறிகளைக் காட்டாத நபர்களை கண்டறிய இந்த சோதனை நடத்தப்பட்டது..

    சனிக்கிழமை மட்டும் 16 லட்சம்

    சனிக்கிழமை மட்டும் 16 லட்சம்

    வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நகரத்தில் மே 14 முதல் 23 வரை 60 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நியூக்ளிக் அமில சோதனைகளை நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று, வுஹானில் கிட்டத்தட்ட 1.15 மில்லியன் சோதனைகளை நடத்தியதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது. நியூக்ளிக் அமில பரிசோதனை என்பது இரத்த பரிமாற்றங்களை பரிசோதிப்பதற்கான ஒரு மூலக்கூறு நுட்பமாகும்.

    4,634 பேர் உயிரிழப்பு

    4,634 பேர் உயிரிழப்பு

    ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சீனாவில் மொத்தம் கொரோனா நோயால் 82,985 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4,634 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு 5,502,590 ஆக உள்ளது. 346,761 பேர் உயிரிழந்துள்ளனர். 2,302,469 பேர் இதுவரை உலகம் முழுவதும் குணம் அடைந்துள்ளனர். 2,853,360 பேர் உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    English summary
    China has reported 51 new coronavirus cases including 40 asymptomatic infections, mostly in Wuhan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X