For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த ஆண்டு சீனாவில் ஒரே ஒரு சூரியன் இருக்காது.. செயற்கை சூரியனுடன் சேர்த்து மொத்தம் 2!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் புதிய முயற்சியான செயற்கை சூரியன் அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என கூறப்படுகிறது.

புதுமையான முயற்சிகளை எடுப்பதில் சீனா நாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்போன், பேனா, பென்சில், ரப்பர், டிவி, ரேடியோ என அனைத்திலும் புதுமையை புகுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் செயற்கை மழை, செயற்கை நிலவு என்ற வரிசையில் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளவுட் சீடிங் எனப்படும் மேக விதைத்தல் முறையில்தான் இது போன்ற புதுமைகள் உருவாக்கப்படும்.

சீனா

சீனா

இதற்கான முயற்சியை சீன நாட்டை சேர்ந்த நேஷனல் நியூக்ளியர் கார்பரேஷனில் பணியாற்றி வரும் அறிவியல் அறிஞர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

செயற்கை சூரியன்

செயற்கை சூரியன்

இந்த பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இரு ஹைட்ரஜன் அணுக்களை இணைப்பதன் மூலம் மிகப் பெரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நிகழ்வு அணுக்கரு இணைவு ஆகும். இதனால்தான் சூரியனில் ஒளியும் வெப்பமும் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. அணுக்கரு இணைவை செயற்கையாக உருவாக்கும் வகையில் செயற்கை சூரியன் அமையும்.

அணுக்கரு இணைவு

அணுக்கரு இணைவு

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. டோக்காமாக் ரியாக்டர் என்ற பெயரில் அணுக்கரு உலையை சீனர்கள் உருவாக்கி அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அணுக்கரு இணைப்பு எவ்வளவு நேரம் இருக்கிறோ அது வரை சூரியனும் ஒளிரும்.

100 மில்லியன் டிகிரி

100 மில்லியன் டிகிரி

பொதுவாக சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் செயற்கை சூரியனின் வெப்பநிலையோ 100 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். அதாவது ஒரிஜினலை விட 6 மடங்கு அதிகம்.

காந்தபுலம்

காந்தபுலம்

HL- 2M Tokomak என இந்த செயற்கை சூரியனுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூரியன் 2020-ஆம் ஆண்டு ஒளிரும் என சீன அறிவியல் அறிஞர்கள் தெரிவித்தனர். இந்த திட்டம் 2006-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சூடான பிளாஸ்மாவை தக்க வைக்க சக்திவாய்ந்த காந்தப்புலமே டோகோமாக் கருவியாகும்.

சீனா முடிவு

சீனா முடிவு

இந்த செயற்கை சூரியனில் இந்த கருவி பயன்படுத்தப்படுவதால் டோகோமாக் என பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் நிலவை போன்ற வடிவத்தில் செயற்கைகோள்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. முதலில் செங்க்டு என்ற நகரத்தில் தெருவிளக்குகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு செயற்கை நிலாவை இரவு நேரங்களில் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

1300 கோடி ரூபாய் மிச்சமாகும்

1300 கோடி ரூபாய் மிச்சமாகும்

2022ம் ஆண்டு மூன்று செயற்கை நிலவுகளை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 50 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட செங்க்டு நகரத்திற்கு செயற்கை நிலவு பயன்படுவதன் மூலம் ஆண்டுக்கு 1,300 கோடிக்கு மேல் சேமிப்பாகும் என கூறப்படுகிறது.

English summary
China Researchers says that Artificial sun will be glitter in the sky in the year 2020. This was annonced in November.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X