For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட உலகின் பெரும் கோடீஸ்வரர்.. ஹீரோ போல வந்து காத்த மகன்.. மாஸ் சம்பவம்!

பெய்ஜிங்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் இருக்கும் பெரும்பாலான பணக்காரர்களில் பலர் சீனாவில் இருக்கிறார்கள். சீனாவின் சமீபத்திய வேகமான வளர்ச்சி அங்கு பல கோடீஸ்வரர்களை உருவாக்கி உள்ளது. அங்கு சுயமாக தொழில் தொடங்கி கோடிகளை குவித்த பணக்காரர்கள் பலர் இருக்கிறார்கள்.

அப்படி சீனாவில் சுயமாக கோடி கோடியாக சம்பாதித்த நபர் ஹே ஜியாங்ஜியான். உலகின் மிகப்பெரிய மின்னணு உதிரி பாக உற்பத்தி நிறுவனமான Midea வை உருவாக்கியது இவர்தான்.

எவ்வளவு பெரிய பணக்காரர்

எவ்வளவு பெரிய பணக்காரர்

உலகின் 40வது பெரிய பணக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹே ஜியாங்ஜியான் சீனாவின் 7வது பெரிய பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. மீடேயா நிறுவனத்தை உருவாக்கி அதை உலகின் முன்னணி நிறுவனமாக மாற்றியவர்தான் ஹே ஜியாங்ஜியான். ஆனால் கோடீஸ்வரர்களுக்கான புகழ் மற்றும் பெருமைகளை விரும்பாமல் இவர் சீனாவில் தனித்து வசித்து வருகிறார் . யாருக்கும் தெரியாமல் குடும்பத்தோடு தனியாக இருக்கிறார்.

எங்கே இருக்கிறார்

எங்கே இருக்கிறார்

ஜூன்லான் லைப் வில்லேஜ் என்ற கிராமத்தில் காட்டுக்குள் பெரிய மாளிகை கட்டி தனியாக குடும்பத்தோடு பெரிய ஏக்கரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பும் போது அவரை ஒரு கும்பல் காரில் மறைத்து கடத்தி இருக்கிறார்கள். துப்பாக்கி முனையில் ஹே ஜியாங்ஜியானை கடத்திய கும்பல் அவரை அவரின் வீட்டிற்கே அழைத்து சென்று இருக்கிறார்கள்.

கடத்தி சென்றனர்

கடத்தி சென்றனர்

ஹே ஜியாங்ஜியானை அவருடைய மாளிகைக்கு கடத்தி சென்ற கும்பல், அவரை வீட்டில் கட்டி போட்டனர். அவரோடு, அவரின் மகன் மற்றும் மனைவியையும் வீட்டில் வேறு அறையில் கட்டி போட்டு இருக்கிறார்கள். பல கோடி பணம் கொடுத்தால்தான் உங்களை விடுவோம் என்று கூறியுள்ளனர். வீடு முழுக்க அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு அதில் டெட்டனேட்டர் வைத்து உள்ளனர்.

தப்பி ஓடினார்

தப்பி ஓடினார்

சுமார் இரண்டு மணி நேரம் இவர்கள் இப்படி பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது சுதாரித்துக் கொண்ட ஹே ஜியாங்ஜியானின் மூத்த மகன் அங்கிருந்து ஜன்னலை உடைத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதில் அவரின் ஒரு கை முறிந்துள்ளது. ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே சென்றவர், அங்கிருந்து காட்டுக்குள் குதித்து ஓடி இருக்கிறார்.

நீச்சல் அடித்து சென்றார்

நீச்சல் அடித்து சென்றார்

பின் அங்கிருந்த நதியில் நீச்சல் அடித்து ஹீரோ போல அடுத்த கரைக்கு சென்று உள்ளார். கரையை கடந்தவர், அங்கு சாலையில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு போன் வாங்கி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பின் அங்கு தகவல் அறிந்து ஹெலிகாப்டரில் போலீசார் கொண்டு வரப்பட்டு, அந்த வீடு மீது இறக்கப்பட்டனர். கடத்தல்காரர்கள் நவீன ஆயுதம் வைத்து இருந்ததால், போலீசும் நவீன ஆயுதத்துடன் உள்ளே வந்தனர்.

மீட்டனர்

மீட்டனர்

அதன்பின் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் ஹே ஜியாங்ஜியானை மீட்டனர். இந்த மீட்பு பணியில் யாருக்கும் எந்தகாயமும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சுமுகமான முடிவு கொண்டு வரப்பட்டது. கடத்தல்காரர்கள் 6 பேரும் அவர்களுடன் நவீன ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்திற்கு ஆசைப்பட்டு இவர்கள் இப்படி செய்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

English summary
China's 7th top billionaire rescued after taken hostages in an village
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X