For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம பிரச்சனைய எல்லாம் நீங்கதான் முடிவுக்கு கொண்டு வரனும்... பைடனுக்கு சீனாவின் மெசேஜ்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபர் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான உறவை பைடன் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்றார்.

அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதே தனது முதன்மையான பணி என்று அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் அரசு எடுத்த பல முக்கிய முடிவுகளை அவர் ரத்து செய்யும் உத்தரவையும் பிறப்பித்தார்.

சீனா வாழ்த்து

சீனா வாழ்த்து

இந்நிலையில், புதிதாகப் பதவியேற்ற ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. டிரம்ப் காலத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான உறவு மோசமானது என்று குறிப்பிட்டுள்ள சீனா, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பைடன் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு இருக்கும்பட்சத்தில் எந்த தீய சக்திகளையும் எளிதில் வெல்ல முடியும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

டிரம்ப் vs சீனா

டிரம்ப் vs சீனா

அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த காலத்தில் அந்நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நிலவி வந்தது. இருநாடுகளும் மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்தன. டிரம்ப் ஆட்சியின்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கொரோனாவின் தோற்றம் என கிட்டதட்ட அனைத்து விஷயங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது குறிப்பிடத்தக்கது.

இரு நாட்டிற்கும் தேவை ஒற்றுமை

இரு நாட்டிற்கும் தேவை ஒற்றுமை

இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில், "அதிபர் பைடன் தனது பதவியேற்பு விழா உரையில் பல முறை ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் தற்போது அவர் குறிப்பிட்ட ஒற்றுமையே இப்போது தேவைப்படுகிறது" என்றார். இருந்தாலும்கூட, பைடனும் சீனாவுக்கு எதிராக சில கடினமான முடிவுகளையே எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் முடிவுகளை மாற்றும் பைடன்

டிரம்ப் முடிவுகளை மாற்றும் பைடன்

டிரம்ப் அரசு சீனாவுடன் மட்டுமின்றி உலக அமைப்புகள் பலவற்றுடனும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தது. இந்நிலையில், புதிதாகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன், உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைந்து செயல்படும் என்று அறிவித்தார். அதேபோல பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மீண்டும் இணைவதாக அறிவித்தார். பைடனின் இந்த முடிவுகளுக்கு உலக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
China on Thursday congratulated President Joe Biden on his inauguration and called for a reset in relations between Beijing and Washington, as the new administration brought an end to the fractious term of Donald Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X