For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழிவின் பிடிவில் உலக அதிசயங்களில் ஒன்றான “சீனப் பெருஞ்சுவர்”!

Google Oneindia Tamil News

பீஜிங்: உலகின் அதிசயங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் சீனப் பெருஞ்சுவரானது அழிவின் பிடிக்கு சென்று வருவதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீனப் பெருஞ்சுவர் கி.பி மூன்றாம் ஆண்டில் இருந்து 17 ஆம் ஆண்டு வரை சுமார் 1400 ஆண்டு காலம் கட்டப்பட்டது. அது, அந்நாட்டை எதிரிகளின் படையெடுப்பில் இருந்து காக்கும் தடுப்பு அரணாக கட்டப்பட்டது.

China's Great Wall poorly preserved

கலாச்சாரச் சின்னம்:

20 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தை தாண்டி நீண்டுச் செல்லும் இந்த சுவரை உலகின் தொன்மை வாய்ந்த கலாச்சார சின்னமாக "யுனெஸ்கோ" 1987 ஆம் ஆண்டில் அறிவித்தது.

40 லட்சம் பேர்:

இத்தனை சிறப்புகள் வாய்ந்த சீனப் பெருஞ்சுவரை ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் வெளிநாட்டு பயணிகள் கண்டு களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சிதிலமடையும் பெருஞ்சுவர்:

எனினும், மிங் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த சுவற்றின் ஒரு பகுதியில் சுமார் 90 சதவீதம் சிதிலமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அழிவுக்கு காரணம்:

புயல், மழை, வெள்ளம், பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களை தாக்குப் பிடித்து கம்பீரமாக நின்ற இப்பகுதியில் உள்ள சுவற்றின் கற்களை பலர் பெயர்த்தெடுத்து சென்றுள்ளனர்.

கவலையில் அதிகாரிகள்:

சுவற்றையொட்டியுள்ள பகுதிகளில் பலர் மரம், செடி, கொடிகளை வளர்த்து வருவதாகவும் அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் அமைப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1035 ரூபாய் கட்டணம்:

சீனப் பெருஞ்சுவரை பார்க்க வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலா பயணியிடமும் 17 அமெரிக்க டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் 1035 ரூபாயை கட்டணமாக வாங்குகின்றது சீன அரசாங்கம்.

பாதுகாக்க வேண்டுகோள்:

இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கலைப் பொக்கிஷத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

English summary
The Great Wall of China, listed as one of seven wonders of the world, is poorly preserved, a Chinese expert has said and blamed irresponsible industrial development and human activities for its deteriorating condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X