For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து பெரும் தொற்று என்ற நிலையிலிருந்து உலகை காப்பாற்றுவதற்கு தங்களிடம் மருந்து உள்ளதாக சீனாவின் முன்னணி ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனா பரவலை கட்டுபடுத்தலாம்... சீன ஆய்வகம் அறிவிப்பு

    சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பரவி பல லட்சம் பேர் உயிரை பறித்துள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சில ஆய்வகங்கள், ஏற்கனவே குரங்குகளுக்கு பரிசோதனை செய்து, அதில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன. மனிதர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

    ஊட்டியில் ஒரே ஜன கூட்டம்.. ரோடெல்லாம் பிசி.. கூடவே சூப்பராக மழை.. இயல்பு நிலை வந்துருச்சோ!ஊட்டியில் ஒரே ஜன கூட்டம்.. ரோடெல்லாம் பிசி.. கூடவே சூப்பராக மழை.. இயல்பு நிலை வந்துருச்சோ!

    தடுப்பூசி இல்லாமல் குணம்

    தடுப்பூசி இல்லாமல் குணம்

    இந்த நிலையில்தான், தடுப்பூசி இல்லாமலேயே வைரஸ் பரவும் வேகத்தை குறைக்க முடியும் என்று சீனாவை சேர்ந்த ஆய்வகம் அறிவித்துள்ளது. சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான, பீக்கிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டுள்ளது ஒரு ஆன்டிபாடி மருந்து. பாதிக்கப்பட்டவர்களுக்கு குணமடையும் வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கொரோனா வைரஸிலிருந்து குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    எலிகளுக்கு நடந்த பரிசோதனையில் வெற்றி

    எலிகளுக்கு நடந்த பரிசோதனையில் வெற்றி

    விலங்கு சோதனை கட்டத்தில் இந்த மருந்து வெற்றி பெற்றது என்று பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட ஆய்வு மைய ஜெனோமிக்ஸின் இயக்குனர் சன்னி ஸீ தெரிவித்தார். "பாதிக்கப்பட்ட எலிகளுக்கு ஆன்டிபாடிகளை நாங்கள் செலுத்தும்போது, ​​ஐந்து நாட்களுக்குப் பிறகு வைரஸ் அடர்த்தி 2,500 காரணி வரை குறைக்கப்பட்டது" என்று ஸீ கூறினார். இந்த மருந்து சிகிச்சையில் பலனளிக்கிறது என்பது இதன் பொருளாகும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    அதாவது, இந்த மருந்தை ஊசி மூலமாக எடுத்துக்கொள்ளும் போது, பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமாகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த மருந்து, குறுகிய காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அந்த காலகட்டத்தில் அவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். எனவே, மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் போன்ற முன் களப் பணியாளர்களுக்கு இதை வழங்குவதன் மூலம், குறுகிய காலத்துக்கு அவர்கள் வைரஸை பிறருக்கு பரிமாற்றம் செய்ய முடியாமல் அந்த தொடர்பு சங்கிலி அறுந்து போகும் சூழ்நிலை உருவாகும் என்று நம்பப்படுகிறது.

    தடுப்பூசிகள்

    தடுப்பூசிகள்

    எலிகளுக்கு நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், மனிதர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகள் தொடங்க உள்ளதாகவும், பன்றிக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டு ஆய்வகங்கள் சில, ஏற்கனவே வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளன. இன்னமும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    ஆன்டிபாடி

    ஆன்டிபாடி

    உலக சுகாதார ஆய்வு நிறுவனம், தடுப்பூசி கண்டுபிடிக்க சுமார் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடகாலம் ஆகக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற நிலையில், ஆன்டிபாடி தடுப்பு மருந்துகள் நோய்களைக் கட்டுப்படுத்தும் என்கிறது சீன ஆய்வு நிறுவனம். இது ஒரு தற்காலிகத் தீர்வாக இருக்க முடியும். இதன் மூலம், ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் கடத்தப்படுவது தடை செய்யப்படுவதால், பெருந்தொற்று என்ற நிலையிலிருந்து மீள முடியும் என்று சீன ஆய்வு கூறுகிறது.

    English summary
    A Chinese laboratory has been developing a drug it believes has the power to bring the coronavirus pandemic to a halt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X