For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9.5 டன் எடை.. 2 வாரத்தில் பூமியை தாக்கும்.. மிரள வைக்கும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்!

சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்கோங்-1 பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோத இருக்கிறது என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பூமி மீது விழப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்!- வீடியோ

    பெய்ஜிங்: சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்கோங்-1 பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோத இருக்கிறது என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.

    சீனா அனுப்பிய முதல் ஸ்பேஸ் ஸ்டேஷன் இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. இது விண்வெளியில் நிரந்தரமாக ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது.

    ஆனால் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் சில மாதங்களுக்கு முன் சீனாவின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணமோ, ஏன் வேலை செய்யவில்லை என்றோ இன்னும் கண்டுபிக்கப்படவில்லை.

    பெரிது

    பெரிது

    ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பெரிய அளவில் இந்த ஆராய்ச்சி நிலையம் இருந்தது. இதன் பெயரின் அர்த்தம் ''சொர்கத்தில் ஒரு பேலஸ்'' என்பதாகும். தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியவில்லை. இதன் எடை 9.5 டன் ஆகும்.

    எப்போது

    எப்போது

    சில மாதங்களுக்கு முன்பு இது மார்ச், இல்லை ஏப்ரல் மாதங்களில் விழும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது சரியான தேதி கூறப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 23ல் இருந்து ஏப்ரல் 9ம் தேதிக்குள் எதோ ஒரு நாளில் கண்டிப்பாக இது பூமியை தாக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    எந்த பகுதி

    எந்த பகுதி

    இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பிரான்ஸ், கிரிஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, சீனாவில் சில பகுதி ஆகிய இடங்களில் மாறி மாறி விழ வாய்ப்பு இருக்கிறது. அப்போதைய காலநிலையும், ஸ்பேஸ் ஸ்டேஷன் விழும் வேகத்தையும் பொறுத்தும் இது மாறுபடுகிறது.

    எவ்வளவு

    எவ்வளவு

    இதன் எடை 9.5 டன் ஆக இருந்தாலும் , மொத்தமாக அப்படியே பூமியில் விழுவது சந்தேகம்தான். ஏனென்றால் பூமியின் சுற்றுசுழலுக்குள் நுழைந்ததும் பாதி பகுதி சாம்பலாகிவிடும். இதனால் 500 பவுண்ட் வரை கண்டிப்பாக பூமியில் விழும், ஆனால் அதுவும் மனிதர்களை தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    A Chinese space lab, called Tiangong-1, is coming towards Earth. It is expected to re-enter into our atmosphere between now and early in two weeks. Report says that it will affect our atmosphere heavily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X