For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனாவின் தாக்குதலால் சீனாவின் வுகான் மாகாணத்தில் செத்து மடிந்த பொதுமக்களின் எண்ணிக்கை 3.200 என்கிறது அந்நாட்டு அரசு. ஆனால் மரணித்தோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக சுமார் 42,000 பேர் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.

Recommended Video

    சீனா உலகை எச்சரிக்காதது ஏன்? என்ன நடந்தது

    சீனாவின் வுகான் மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. அந்த மாகாணத்தில் 2,500 பேரை பலி கொண்ட கொரோனாவின் தாக்கம் திடீரென அங்கு குறைந்தது.

    Chinas Wuhan Residents doubts over Coronavirus Death Toll

    ஆனால் உலக நாடுகளில் மிகப் பெரும் பேரழிவை கொரோனா உருவாக்கி வருகிறது. உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேரை பலி கொண்டு வருகிறது கொரோனா. இதன் உக்கிரம் இன்னமும் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் வுகான் மாகாணத்தில் மயானங்களில் தொடர்ந்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டன.

    கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள் கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள்

    இதனடிப்படையில் வுகான் மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. சீனாவைப் பொறுத்தவரையில் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 3,200.

    ஆனால் மொத்தம் 42,000 பேர் சீனாவில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையே உள்ளூர் மக்களும் வெளிப்படுத்துகின்றனர்.

    English summary
    China's Wuhan Residents are raising doubts over the Coronavirus Death Toll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X