• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"போருக்கு தயாராகுங்கள்.." சீன ராணுவத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு!

Google Oneindia Tamil News

பீஜிங்: போரை எதிர்கொள்ள, சீனப் படைகள் தங்கள் மனதையும், சக்தியையும் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, சீன அதிபர் ஜி ஜின்பிங் ராணுவ வீரர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சீனாவின் சாவோஜோ சிட்டியிலுள்ளள, சீன மக்கள் விடுதலைப் படை கடலோர படைப் பிரிவை பார்வையிட சென்ற ஜி ஜின்பிங், அவர்கள் மத்தியில் இவ்வாறு உரை நிகழ்த்தியுள்ளதாக, அந்த நாட்டு, அரசு ஊடகம் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

குவாங்டாங் பிராந்தியத்திற்கு ஜி ஜின்பிங் நேற்று சென்றிருந்தார். அங்கு 1980ம் ஆண்டு, ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலம் துவக்கப்பட்டதன் 40வது ஆண்டு விழா நடைபெற்றது.

பொருளாதார மண்டலம்

பொருளாதார மண்டலம்

உலகிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா மாறுவதற்கு முக்கிய காரணம், இந்த பொருளாதார மண்டலம்தான். எனவே, கொரோனா விவகாரம், சர்வதேச நாடுகள் சீனா மீது விதிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, இந்தவிழா முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

பதற்றங்கள்

பதற்றங்கள்

ஆனால், ஜி ஜின்பிங், ராணுவ வீரர்கள் மத்தியிலும் உரை நிகழ்த்தினார். இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை, சீனா-அமெரிக்கா இடையே, தைவான் விவகாரம், கொரோனா விவகாரத்தால் நிலவும் பதற்றம் போன்றவற்றுக்கு இடையே, ராணுவ வீரர்களை போருக்கு தயாராக இருக்கும்படி சீன அதிபர் கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

போரை நோக்கி ஆயத்தமாகுங்கள்

போரை நோக்கி ஆயத்தமாகுங்கள்

ஜி ஜின்பிங் தனது உரையில், "ராணுவ வீரர்களே உங்கள் மனது, சக்தி அனைத்தையும், போர் என்பதை நோக்கி வைத்திருங்கள். எப்போதும் விழிப்புடன் இருங்கள், தாய்நாட்டு மீது முழு விசுவாசத்துடன் இருங்கள், தூய்மையாக இருங்கள், நம்பத் தகுந்தவர்களாக இருங்கள்" என்று ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.

அமெரிக்கா ஆயுதங்கள்

அமெரிக்கா ஆயுதங்கள்

சமீபத்தில், அமெரிக்க காங்கிரசில், அந்த நாட்டு அரசு ஒரு முக்கிய விஷயத்தை அறிவித்திருந்தது. அதாவது, தாய்வானுக்கு, 3 அதி நவீன ஆயுத சிஸ்டமை அமெரிக்கா விற்பனை செய்ய உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டது. இதில், உயர் இயக்க பீரங்கி ராக்கெட் அமைப்பும் அடங்கும். அதேநேரம், சீன வெளியுறவு துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், ஜாவோ லிஜியன் "தைவானுக்கான எந்தவொரு ஆயுத விற்பனை செய்யும் திட்டத்தையும் உடனடியாக அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும்" அமெரிக்க-தைவான் ராணுவ உறவுகளை குறைக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

தைவான் விவகாரம்

தைவான் விவகாரம்

சீனாவின் ஆட்சியின் கீழ், தைவான் ஒருபோதும் இருந்ததில்லை என்றாலும், சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி வருகிறது.
சீன அரசின் எதிர்ப்புக்கு இடையேயும், தைவானுடன், அமெரிக்கா உறவை அதிகரித்து வருகிறது. இந்த உறவுகள் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நெருக்கமாகின. கடந்த ஆகஸ்டில், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அசார் தைவானுக்கு விசிட் செய்தார். பல தசாப்தங்கள் பிறகு அமெரிக்காவின் மிக முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் தைவான் சென்றது அதுதான் முதல் முறை.

English summary
Chinese President Xi Jinping has called on troops to "put all (their) minds and energy on preparing for war" in a visit to a military base in the southern province of Guangdong on Tuesday, according to state news agency Xinhua.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X