For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவால் வெளியான உண்மை.. சீனாவை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இத்தனை காலமாக உலகிற்கு எவ்வளவு பெரிய தீங்கை சீனா இழைத்து வந்துள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் தற்போது, அம்பலமாக்கி உள்ளன.

Recommended Video

    கொரோனாவை அடுத்து சீனாவில் ஹண்டா வைரஸ்... உண்மை என்ன?

    கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அந்த பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே, யாரும் அனுமதிக்கவில்லை. வெளியேயும் யாரையும் விடவில்லை.

    இந்த நிலையில்தான், தலைநகர் பீஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகக் கூடிய நச்சுப்புகை மிகமிகக் குறைந்து விட்டது.

    நிறைய மாசு

    நிறைய மாசு

    அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை சீனா வெளியிட்டு வருவதாக அமெரிக்க இதற்கு முன்பாக குற்றஞ்சாட்டி இருந்த போதெல்லாம் அதை மறுத்து வந்தது சீன அரசு. சில ஆய்வுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் மொத்த அளவை விடவும் சீனா அதிகமாக வெளியிடுவதாக குற்றம்சாட்டி வந்தனர்.

    புகை குறைவு

    புகை குறைவு

    இத்தனை நாட்களாக இதை சீனா மறுத்து வந்த நிலையில், இதை உண்மை என்று கூறும் அளவுக்கான ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த படம் 2019 டிசம்பர் 20ஆம் தேதி மற்றும் இந்த நோய் பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் எடுக்கப்பட்டது.

    இரு படங்கள்

    இரு படங்கள்

    இந்த இரு நாட்களிலும், சீனாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு எந்த அளவுக்கு மாறுபட்டு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. தற்போது அங்கு புகைமூட்டம் இல்லாமல் தெளிவான நிலை காணப்படுகிறது. ஆனால் டிசம்பர் மாதத்தில் புகை மிக அதிகமாக, செயற்கைக்கோள் படத்தில், சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.

    இயல்பு நிலை

    இந்த இரு படங்களையும் பார்க்கும்போது சீனாவில் எந்த அளவு தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் புரிகிறது. அதேநேரம் புகை வெளியிடவில்லை என்று பொய் சொல்லி தப்பிக்க முடியாது என்பதும் உறுதியாகி உள்ளது. சீனாவில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா நிலை

    அமெரிக்கா நிலை

    கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சீனாவிலும், இத்தாலியிலும் காற்று மாசு அளவு வெகுவாகக் குறைந்தது போலவே, அமெரிக்காவிலும் நடந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் -5 பி செயற்கைக்கோளின் டேட்டாவை ஆதாரமாக கொண்டு, வெளியாகியுள்ள படங்கள், நியூயார்க், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் வளிமண்டலத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு குறைந்துள்ளது.

    English summary
    Using satellite data, this animation shows the reduction of nitrogen dioxide emissions across China from Dec. 20, 2019, to March 16, 2020
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X