For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா சீனா ஒப்பந்தத்தை மதிக்கிறோம்... அமைதிக்கு ஒத்துழைப்போம்... ராஜ்நாத் பேச்சுக்கு சீனா பதில்!!

Google Oneindia Tamil News

பீஜிங்: இந்தியா சீனா இடையே எல்லையில் ஸ்திரத்தன்மை, அமைதி ஏற்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மதிக்கிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து நிலவி வந்த எல்லை பதற்றத்தில் கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன வீரர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

சூர்யா வில்லன் டாங்லி தோற்றார் போங்க.. சீன வீரர்களிடம் அருணாச்சல் இளைஞர் அனுபவித்த சித்ரவதை இது!. சூர்யா வில்லன் டாங்லி தோற்றார் போங்க.. சீன வீரர்களிடம் அருணாச்சல் இளைஞர் அனுபவித்த சித்ரவதை இது!.

படைகள் வாபஸ்

படைகள் வாபஸ்

இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி எல்லையில் இருநாடுகளும் அமைதியை ஏற்படுத்தும் வகையில் படைகளை வாபஸ் வாங்குவது, ராஜாங்க ரீதியாக பேச்சுவார்த்தை மேற்கொள்வது என்று கூறப்பட்டு இருந்தது.

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

இதையடுத்து நேற்று முன்தினம் லோக் சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ''இந்திய, சீன எல்லை சிக்கலுக்கு இன்னும் முடிவு காணப்படவில்லை. சீனா தனது நிலையை விட்டுக் கொடுக்கவில்லை. நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்'' என்று தெரிவித்து இருந்தார்.

சீன படை

சீன படை

இதையடுத்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின்னிடம் பீஜிங்கில் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். லோக் சபாவில் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். ஏன் எல்லையில் சீனா படைகளை வாபஸ் பெற மறுக்கிறது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அமைதி

அமைதி

இதற்கு பதிலளித்தபோது, இந்தியா சீனா இடையே ஏற்பட்ட ஓப்ந்த்ததை மதிக்கிறோம். எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். அதேசமயம் எங்களது இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை விட்டு கொடுக்க மாட்டோம்'' என்று தெரிவித்தார்.

புரிந்துணர்வு

புரிந்துணர்வு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லோக் சபாவில் பேசி இருந்த ராஜ்நாத் சிங், ''சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை இரு நாடுகளும் மதிக்க வேண்டும். எல்லையில் இருக்கும் நிலைப்பட்டை மாற்றி அமைக்க இருநாடுகளும் முயற்சிக்க கூடாது. இருநாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒப்பந்தங்களையும் பின்பற்ற வேண்டும். மாஸ்கோவில் இருநாடுகளுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா நடந்து கொள்ளும். இந்த விஷயத்தில் சீனாவுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராஜதந்திர பேச்சு

ராஜதந்திர பேச்சு

இதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து இருந்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்க், ''எல்லையில் அமைதியை நிலைநாட்ட ராஜதந்திர மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைகளின் மூலம் சமரசம் ஏற்பட எப்போதும் சீனா தயாராக இருக்கிறது'' என்று கதெரிவித்து இருந்தார்.

English summary
China Says Honouring All Agreements between India and china
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X