For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிக் டாக் ஆப்பின்...அமெரிக்காவுக்கு எதிரான...சட்ட நடவடிக்கை...சீனா ஆதரவு!!

Google Oneindia Tamil News

பீஜிங்: அமெரிக்க நிறுவனத்துக்கு டிக் டக் ஆப்பை விற்க வேண்டும் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பின்னர் அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்து இருந்தார். இதை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிக் டாக் உரிமை நிறுவனமான பைட்டான்ஸ் தெரிவித்து இருந்தது.

Recommended Video

    TikTok- க்கு ஆதரவு.. America-வுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் China

    இதையடுத்து, டிக் டாக்கின் இந்த நடவடிக்கைக்கு சீனா துணை நிற்கும் என்று அந்த நாடு தெரிவித்துள்ளது. அமெரிக்க நிர்வாகத்துக்கு எதிராக சீன நிறுவனங்கள் எடுக்கும் உரிமை மற்றும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.

    china says it supports tik tok app to take legal action against america

    சீன வெளியுறவுத்துறை செயலாளர் ஜாவ் லிஜியன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ''அமெரிக்கர்களின் நடவடிக்கை எல்லாம், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. டிக் டாக் நிறுவனத்தின் சட்ட செயல்களுக்கு சீனா துணை நிற்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

    வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டிக் டாக் அந்த நாட்டுடன் தொழில் கூட்டு வைத்துக் கொள்வதற்காக பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுடன் தொழில் கூட்டு வைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

    காங். மூத்த தலைவர்களுக்கு பாஜகவுடன் தொடர்பு என ராகுல் சொல்லவே இல்லை.. ரந்தீப்சிங் சுர்ஜிவாலாகாங். மூத்த தலைவர்களுக்கு பாஜகவுடன் தொடர்பு என ராகுல் சொல்லவே இல்லை.. ரந்தீப்சிங் சுர்ஜிவாலா

    டிக் டாக் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலரில் இருந்து 30 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதில் முதலீடு செய்து இருக்கும் நிறுவனங்களும் தற்போது தங்களது முதலீட்டை மாற்றிக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். அப்படி இருக்கும்பட்சத்தில் இவர்களது முதலீட்டை அமெரிக்க நிறுவனங்கள் வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    china says it supports tik tok app to take legal action against america

    கொரோனா தொற்றுக்குப் பின்னர் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ளது. சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்று திட்டவட்டமாக ட்ரம்ப் கூறி வந்தார். சீன வைரஸ் என்றும் அழைத்தார். இந்த நிலையில்தான். இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும், டிக் டாக் தடை செய்யப்படும் என்று ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.

    English summary
    china says it supports tik tok app to take legal action against america
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X