For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான் கான் முகத்தில் கரியை பூசும் உலக நாடுகள்.. காஷ்மீர் விவகாரத்தில் ஓங்கி கதவை சாத்திய சீனா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kashmir Issue: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஒதுக்கும் உலக நாடுகள் - வீடியோ

    பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐநா சாசனத்தின்படியும் 1972-இல் சிம்லா ஒப்பந்தத்தின்படியும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு சீனா, பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அது போல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் அது மாநில அந்தஸ்தையும் இழந்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிகம் வசிக்கும் காஷ்மீரை அழித்துவிட்டு பெரும்பான்மையினராக மாற்ற முயற்சிக்கிறது இந்தியா என இம்ரான்கான் குற்றம்சாட்டியிருந்தார்.

    அழறதா, சிரிக்கிறதான்னே புரியல பாஸு.. அதிகாரம் பறிபோன பின்னும் மடங்காத மணிகண்டன்! அழறதா, சிரிக்கிறதான்னே புரியல பாஸு.. அதிகாரம் பறிபோன பின்னும் மடங்காத மணிகண்டன்!

    மூக்கறுபடுவது

    மூக்கறுபடுவது

    இதையடுத்து இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்வது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் பஞ்சாயத்தை வைப்பதும் மூக்கறுபடுவதுமாக இருக்கிறது.

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்ட பாகிஸ்தானிடம் சிம்லா ஒப்பந்தத்தின் படி காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே தீர்வு காண வேண்டும். இதில் மூன்றாவது நபர் தலையிட முடியாது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துவிட்டது.

    சீன அமைச்சர்

    சீன அமைச்சர்

    சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இம்ரான்கானின் அழைப்பிற்கு செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான், சீனாவின் உதவியை நாடியது. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் ஈயை பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மமூத் குரேஷி சந்தித்தார்.

    அமைதி தீர்வு

    அமைதி தீர்வு

    அப்போது வாங்க் ஈ கூறுகையில் காஷ்மீர் விவகாரம் என்பது நீண்ட நாள் பிரச்சினையாகும். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான முடிவை எடுத்திருப்பது கவலையை அளித்துள்ளது. எனவே இந்த பிரச்சினை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சாசனத்தின்படியும் இரு தரப்பு ஒப்பந்தத்தின்படியும் முடிவு முறையாக அமைதியாக தீர்வு காண வேண்டும்.

    கையை விரித்த சீனா

    கையை விரித்த சீனா

    தன்னிச்சையான முடிவுகள் காஷ்மீர் விவகாரத்தை சிக்கலில் கொண்டு செல்லும் என்பது சீனாவின் கருத்தாகும். பாகிஸ்தானை சீனா ஆதரிக்கும். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது பதற்றத்தை அதிகரிப்பது உள்ளிட்ட வேலைகளை தன்னிச்சையாக செயல்படுவதை இந்தியா தவிர்ப்பதுதான் முதல் முக்கிய வேலையாகும் என சீனா கையை விரித்து விட்டது.

    English summary
    China says Pakistan that it is seriously concerned about Kashmir issue and it should be resolved bilaterally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X