For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!

Google Oneindia Tamil News

காத்மாண்டு :நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக சீனா 4 பேர் கொண்ட குழுவை நேபாளத்துக்கு அனுப்பி உள்ளதாக நேபாள பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) சர்வதேச துறையின் துணை மந்திரி குவோ யெஜோ தலைமையில் குழுவினர் சமாதான முயற்சியில் ஈடுபட உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

கடந்த வாரம் நேபாள நாடளுமன்றத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அங்கு முன்னரே தேர்தல் நடத்த அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்... பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்!எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்... பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்!

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு கே.பி. சர்மா ஒலி தலைமையிலான, சி.பி.என்.யு.எம்.எல்., மற்றும் முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தாஹரல் பிரசந்தா தலைமையிலான, சி.பி.என்., மாவோயிஸ்ட் மையம் இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.

கோஷ்டி மோதல்

கோஷ்டி மோதல்

பிரசந்தா கோஷ்டிக்கு பெரும்பான்மை அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில மாதங்களாக இரு தரப்பும் இடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. பிரதமர் கே.பி. சர்மா ஒலி அரசு மற்றும் கட்சிப் பணிகளை இணைத்து பார்ப்பதால், அவரால் சரியாக செயல்பட முடியவில்லை' எனவே அவர் பதவி விலக வேண்டும் என பிரசந்தா தரப்பில் கூறப்பட்டது.

பதவி விலகுங்கள்

பதவி விலகுங்கள்

இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தை நடந்த போதும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் சில பகுதிகளை இணைத்து புதிய தேசிய வரைபடத்தை நேபாள பிரதமர் வெளியிட்டார். அவர் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், பதவி விலக வேண்டும் எனவும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் கலைப்பு

நாடாளுமன்றம் கலைப்பு

கடந்த 19-ம் தேதி கே.பி. சர்மா ஒலி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது நாடளுமன்றத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீர்மான நகல் அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு அளிக்கப்பட்டது.

முன்கூட்டியே தேர்தல்

முன்கூட்டியே தேர்தல்

அடுத்த சில மணி நேரங்களிலே நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் பண்டாரி அறிவித்தார். மேலும், ஏப்ரல் 30 மற்றும் மே 10-ம் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்த அரசியல் குழப்பத்தால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சீனா சமாதானம்

சீனா சமாதானம்

இந்த நிலையில் நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக சீனா 4 பேர் கொண்ட குழுவை நேபாளத்துக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக காத்மாண்டு போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:-நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காகவும், சமரசம் ஏற்படுத்துவதற்காகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) சர்வதேச துறையின் துணை மந்திரி குவோ யெஜோ தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேபாளம் வருகின்றனர்.

விவரங்கள் அளிக்க மறுப்பு

விவரங்கள் அளிக்க மறுப்பு

குவோ யெஜோ தலைமயிலான குழுவினர் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தரையிறங்க உள்ளது. இது நேபாளத்தில் காணப்படும் நிலைமையை நேரடியாக மதிப்பிடுவதற்கான பெய்ஜிங்கின் முயற்சி என்று அந்த பத்திரிக்கை கூறியுள்ளது.என்.சி.பி கூட்டணி பிரிவின் வெளியுறவுத் துறை துணைத் தலைவர் பிஷ்ணு ரிஜால் சீன குழுவினர் வருகையை உறுதி செய்துள்ளார். ஆனால் இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

English summary
Nepal Press reports that China has sent a four-member delegation to Nepal to resolve the political crisis in the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X