For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன்று சேர்ந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா.. மொத்தமாக படைகளை இறக்கிய சீனா.. தென்சீன கடல் பகுதியில் பதற்றம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தென் சீன கடல் எல்லையில் நடக்கும் மோதல் தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    China-வுக்கு எதிராக கை கோர்த்த USA-Australia | South China Sea Dispute |Oneindia Tamil

    சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான மோதல் தற்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்து உள்ளது. இரண்டு நாட்டு அதிகாரிகள், உயர் தலைவர்கள் டிவிட்டரில் வெளிப்படையாக அடித்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கொரோனா தொடக்க காலத்தில் இருந்தே சண்டை நிலவி வருகிறது. இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக வர்த்தக மோதலில் ஈடுபட்டது. தற்போது இந்த மோதல், தென் சீன கடல் எல்லையில் ராணுவ மோதலாக விரிவடைந்து உள்ளது.

    கெத்தாக கால் பதித்தது.. சீனாவின் கெத்தாக கால் பதித்தது.. சீனாவின் "உள்நாட்டு அரசியலை" அசைத்து பார்க்கும் இந்தியா.. ஜிங்பிங் கலக்கம்!

    தென்சீன கடல் எல்லை மோதல்

    தென்சீன கடல் எல்லை மோதல்

    தென் சீன கடல் எல்லை பகுதியில் 90% பகுதியை சீனா மொத்தமாக ஆக்கிரமித்து உள்ளது. இந்த கடல் பகுதி மொத்தமாக தனக்கு சொந்தம் என்று சீனா உரிமை கோருகிறது. ஆனால் இதே கடல் எல்லையில்தான் மலேசியா, வியட்நாம், தைவான், புரூனாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த நாடுகளின் கடல் பகுதியையும், சர்வதேச கடல் பகுதியையும் சேர்த்துதான் சீனா இப்படி சொந்தம் கொண்டாடுகிறது. இதுதான் பிரச்னைக்கு காரணம்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இங்கு இருக்கும் அதீத எண்ணெய் வளம் மற்றும் பொருளாதார வர்த்தக போக்குவரத்தை கருத்தில் கொண்டு சீனா இப்படி உரிமை கொண்டாடுகிறது. இதை தடுக்கும் பொருட்டுதான் இங்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பி உள்ளது. அமெரிக்கா இந்த இடத்தில் தனது போர் கப்பல்களை மற்றும் படைகளை களமிறக்கி உள்ளது. வரிசையாக போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை வைத்து அமெரிக்கா அங்கு ரோந்து பணிகளை செய்தது.

    ஆஸ்திரேலியா இணைந்தது

    ஆஸ்திரேலியா இணைந்தது

    இதில்தான் சீனா மீது இருக்கும் கோபத்தில் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அமெரிக்காவிற்கு ஆதரவாக ஆஸ்திரேலியா இங்கு போர் கப்பல்களை அனுப்பியது. ஆஸ்திரேலியாவின் நான்கு போர் கப்பல்கள் சீனாவின் எல்லைக்குள் ரோந்து பணிகளை மேற்கொண்டது. இது தற்போது சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. சீனாவின் எல்லை பிரச்சனையில் ஆஸ்திரேலியா தலையிட்டதை ஜிங்பிங் விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியா சொன்னது

    ஆஸ்திரேலியா சொன்னது

    இதனால் சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான மோதல் தற்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்து உள்ளது. தென்சீன கடல் பகுதி சீனாவிற்கு சொந்தம் இல்லை. இந்த கடல் பகுதியில் சீனா அத்துமீறி உள்ளது. இது சர்வதேச கடல் பகுதி. சீனா இங்கு எல்லை மீறி வருகிறது. பிற நாட்டு எல்லைக்குள் சீனா செல்கிறது என்று ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது. இரண்டு நாட்டு அதிகாரிகள், உயர் தலைவர்கள் டிவிட்டரில் வெளிப்படையாக அடித்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா மீது கோபம்

    ஆஸ்திரேலியா மீது கோபம்

    இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதி முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமானது. இதில் ஆஸ்திரேலியா தலையிடுவது தவறு. எங்கள் உள்நாட்டு பிரச்சனையில் ஆஸ்திரேலியா தலையிடுவதை ஏற்க முடியாது. ஆஸ்திரேலியா இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா கூறியுள்ளது. இது மோதலை பெரிதாக்கி உள்ளது.

    படைகள் குவிப்பு

    படைகள் குவிப்பு

    இந்த நிலையில் தென் சீனா கடல் எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் படைக்கு அருகிலேயே சீனா தனது படைகளை குவித்து உள்ளது. அங்கு தற்போது சீனா மிக தீவிரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறது. 6க்கும் அதிகமான போர் கப்பல்களை குவித்து சீனா அங்கு தீவிரமான பயிற்சியை செய்து வருகிறது.

    English summary
    China sends more of its warships to the South China Sea against the USA and Australia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X