For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமி மீது விழப்போகும் சீன விண்வெளி நிலையம் - விஞ்ஞானிகள் அச்சம்

By BBC News தமிழ்
|
Artwork: Tiangong-1
China Manned Space Agency
Artwork: Tiangong-1

வெள்ளிக்கிழமை வாக்கில் சீன விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழலாம் என்று அதனை கண்காணித்து வருகின்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதிதான் தியன்கொங்-1 என்கிற விண்கலன்.

2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்புகின்ற திட்டத்தின் மாதிரியாக தியன்கொங்-1 விண்கலன் இருந்தது.

2011ஆம் ஆண்டு இது விண்வெளிக்கு அனுபப்பட்டது. 5 ஆண்டுகால பணிகளை நிறைவேற்றிய பின்னர், பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது இது கட்டுப்படுத்த படாமல் உள்ளதால், எங்கு, எப்போது விழும் என்பது கணிக்க முடியாமல் உள்ளது.

மார்ச் 30 முதல் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் அது பூமியில் விழலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பெருமளவிலான பாகங்கள் வளிமண்டத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால், சில பாகங்கள் வளி மண்டலத்தையும் தாண்டி பூமியில் விழலாம்.

எங்கு விழும்?

தியன்கொங்-1 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், அதனை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் 2016ஆம் ஆண்டு சீனா உறுதிப்படுத்தியது.

எனவே, அது எங்கு விழும் என்று தெரியவில்லை.

43 டிகிரி வடக்கிலும், 43 டிகிரி தெற்கிலும் என நிலநடுக்கோட்டின் வட மற்றும் தென் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் இது விழக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தியன்கொங்-1 பற்றி தொடர்ந்து தகவல்களை அளித்து வருகின்ற ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், இது மார்ச் 30 முதல் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் பூமியில் விழலாம் என்று கணித்துள்ளது.

ஆனால், இந்த நேரம் சற்று மாறுபடலாம் என்றும் அது கூறியுள்ளது.

இந்த வார இறுதியில் இது பற்றி துல்லியமாக சொல்லிவிட முடியும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது.

Rocket
AFP
Rocket

எவ்வாறு மோதும்?

இந்த விண்கலம் மெதுவாக பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

இது நெருங்கி வருகின்ற வேகம் வளிமண்டலத்தில் படிப்படியாக அதிகரித்து, காற்றை ஊடுருவி வருகின்ற இந்த விண்கலம் மிகவும் கடினமாகிவிடும்" என்று விண்வெளி பொறியியல் ஆய்வகத்திற்கான ஆஸ்திரேலிய மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் எலியாஸ் அபௌடானோஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும்போது, அது படிப்படியாக வெப்பமடைய தொடங்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

இதனால், இந்த விண்கலத்தின் பெருமளவு பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். இந்த விண்கலத்தை எவ்வாறு செய்தனர் என்பதை சீனா தெரிவிக்காமல் இருப்பதால், பூமி வரை அதன் எந்தப் பகுதி வந்தடையும் என்பது சரியாக தெரியவில்லை.

மக்கள்தொகை அதிகமாக வாழும் இடத்தில், இரவு வேளையில் இது எரிந்து விழுமானால், எரிக்கல் அல்லது, எரி நட்சத்திரம் போல கண்களுக்கு தெரியும் என்று அபௌடானோஸ் கூறியுள்ளார்.

விண்வெளிக்கு சென்ற முதல் சீனர் 2003ம் ஆண்டு தேசிய நாயகனாக புகழ்பெற்றார்.
Getty Images
விண்வெளிக்கு சென்ற முதல் சீனர் 2003ம் ஆண்டு தேசிய நாயகனாக புகழ்பெற்றார்.

கவலைப்பட வேண்டுமா?

இதற்கு கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை.

வளிமண்டலத்தை தாண்டி வருகின்ற வேளையில், 8.5 டன் எடையுடைய இந்த விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் கழன்று எரிந்து சம்பலாகி போய்விடும்.

எரிபொருள் கிடங்கு அல்லது ராக்கெட்டு எந்திரங்கள் போன்ற மிகவும் கடினமாக சில பகுதிகள் மட்டும் முழுமையாக எரிந்து போகாமல் இருக்கலாம்.

பூமியின் மேற்பரப்பு வரை இந்தப் பாகங்கள் வந்தாலும், மனிதரை தாக்குகின்ற சாத்தியம் மிகவும் குறைவு.

"நம்முடைய முந்தைய அனுபவங்களின்படி இத்தகைய விண்கலன்களின் 20 முதல் 40 சதவீதம் வரையான பாகங்கள் பூமியை வந்தடையலாம். இந்த பாகங்களை பூமியில் கண்டுபிடிக்க முடியும்" என்று சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் உடைந்த பாகங்களுக்கான அலுவலக தலைவர் ஹோல்கர் கேராக் தெரிவித்தார்.

இதனுடைய பாகம் ஒன்றால் காயமடைவது என்பது நடைபெறாத விடயம். ஒரேயாண்டில் மின்னலால் 2 முறை தாக்கப்படுவதுபோல, இத்தகைய பாகம் ஒன்றால் தாக்கப்படுவது மிகவும் அரிதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள்; அடுத்த இலக்கு நிலவு

விண்வெளி கழிவுகளின் உடைந்த பாகங்கள் எல்லாம் பூமியில் விழுமா?

இந்த உடைந்த பாகங்கள் பூமியை நோக்கி வருகின்றபோது, புரிந்து விடுகின்றன அல்லது பெருங்கடலின் மத்தியில், மக்கள் இருப்பதை விட வெகுதொலைவில் விழுந்துவிடுகின்றன.

வரைபடம் அல்லது செயற்கைக்கோள் மூலம் அதனோடு இன்னும் தொடர்பு இருக்கலாம். எனவே, தரை கட்டுப்பாடு மூலம் அதனை இப்போதும் கட்டுப்படுத்தி நாம் விரும்புகிற இடத்தில் அதனை விழ செய்ய வாய்ப்புள்ளது.

வழக்கமாக, யாருமே சென்றடைய முடியாத, நிலத்தை விட்டு வெகுதெலைவில் இருக்கின்ற பெருங்கடல் துருவங்களுக்கு அருகில் இந்த உடைந்த பாகங்கள் விழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடையிலுள்ள தெற்கு பசிபிக்கிலுள்ள பகுதியில்தான் இதனை விழ செய்கின்றனர்.

சுமார் 1,500 சதுர கிலோமீட்டருக்கு மேலான இந்தப் பகுதி விண்கலன் மற்றும் செயற்கைக்கோள்கள் புதைந்திருக்கும் கல்லறையாக உள்ளது. சுமார் 260 விண்வெளி கழிவுகள் பெருங்கடலுக்குள் தரையில் சிதறி கிடப்பதாக கருதப்படுகிறது.

அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Debris from a defunct Chinese space station could crash to Earth as early as Friday, scientists monitoring it say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X