For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலவில் சீனா புதிய சாதனை... உலக நாடுகளின் போட்டி களமாக மாறியுள்ள நிலவு!

Google Oneindia Tamil News

பீஜிங்: நிலவின் மேற்பரப்பில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் பாறை துகள்களை எடுத்து கொண்டு பூமிக்கு திரும்பி உள்ளது.

நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறை, கல் துகள்களை சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். பின்னர் அதனை ஆய்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா ரஷியாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற உள்ளது. நிலவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன.

சீன விண்கலம்

சீன விண்கலம்

அமெரிக்கா, ரஷியா நாடுகளை அடுத்து சீனாவும் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த மாத இறுதியில் சீனா விண்ணில் செலுத்தியது.

வெற்றிகரம்

வெற்றிகரம்

பின்னர் அந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறை துகள்களுடன் கடந்த 14-ம் தேதி பூமியை நோக்கி புபுறப்பட்டது. இந்த நிலையில் 'சேஞ்ச்-5' விண்கலம் இன்று அதிகாலை 2 மணியளவில் சீனாவின் இன்னர் மங்கோலியா மாகாணம் சிசிவாங்க் மாவட்டத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி, விண்கலத்தின் வெப்பத்தை வைத்து மீட்புக் குழுவினர். கண்டுபிடித்தனர் .

தீவிர ஆய்வு பணி

தீவிர ஆய்வு பணி

இதையடுத்து, அந்த விண்கலத்தில் கொண்டுவரப்பட்ட நிலவின் பாறை, கல் துகள்களை சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். பின்னர் அதனை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து உள்ளது.

பழமையானவை

பழமையானவை

சீனாவுக்கு முன்னரே நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்காவும், ரஷ்யாவும். இந்த இரண்டு நாடுகளும் இதுவரை மொத்தம் சுமார் 400 கிலோ அளவுக்கு நிலவின் மாதிரிகளைச் சேகரித்துள்ளன. இந்த மாதிரிகள் அனைத்தும் சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. ஆனால் சீனாவின் சேஞ்ச்-5' விண்கலம் கொண்டு வந்திருக்கும் நிலவின் பாறை மற்றும் மண் மாதிரிகள் மாறுபட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

போட்டி

போட்டி

கற்பனைகளிலும், கதைகளிலும் நமக்கு மிகவும் பரீட்சயமான நிலா, தற்போது உலக நாடுகளின் போட்டி களமாக மாறியுள்ளது. பூமியில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் உலக நாடுகள் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவிலும் அதனை செயல்படுத்த முயன்று வருகின்றன. நிலவில் ஆராய்ச்சி செய்தவற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியிருப்பதால் முதலில் பல நாடுகள் தயங்கின. தற்போது பல நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் மும்முரம் காட்டி வருகின்றன.

ஆதிக்கம்

ஆதிக்கம்

விண்வெளித்துறையில் பல சாதனைகளை படைக்கும் ரஷ்யா1959 -ம் ஆண்டு முதலில் நிலவுக்கு லூனா 2 விண்கலத்தை உலக நாடுகளில் முதன் முதலில் நிலவுக்கு அனுப்பியது. ஆனால் 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11 திட்டத்தின் கீழ் நிலவுக்கு முதன் முதலில் மனிதனை அனுப்பிய அமெரிக்கா உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது . மேலும், அமெரிக்க விண்வெளி அமைப்பான "நாசா", தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக கூறியுளளது. ஆனால் பல விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி உள்ள ரஷ்யாவால் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. சீனாவும் ஏற்கனவே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது. இதேபோல் ஜப்பானும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது.

நமது நாடும் முத்திரை

நமது நாடும் முத்திரை

நிலவு ஆராய்ச்சியில் நமது இந்தியாவும் தனது முத்திரையை பதித்து உள்ளது. முதல் கட்டமாக 2008 ஆம் ஆண்டு நிலவுக்கு சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பியது இந்தியா.அங்கு 2 ஆண்டுகளாக ஆய்வு நடத்திய சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து பெருமை சேர்த்தது.

சந்திராயன்-2

சந்திராயன்-2

அதன் பிறகு உலக நாடுகளில் முதன் முறையாக நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன்-2 விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. ஆனால் நிலவில் தரை பதிக்கும் முயற்சியில் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தாலும், விண்வெளி துறையில் உலக நாடுகளின் அசுர வளர்ச்சி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இவ்வாறு பல்வேறு உலக நாடுகள் நிலவில் ஆதிக்கத்தை நிலைநாட்ட போட்டி போட்டு வருகின்றன.

English summary
China has launched the Change 5 unmanned spacecraft to bring rock fragments from the surface of the moon to Earth and study them. The spacecraft has returned to Earth carrying rock fragment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X