For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் ராணுவ புரட்சி வெடிக்கும்.. ஜிங்பிங்கை மிரட்டும் மூத்த தலை.. இந்தியாவை சீண்டியதால் சிக்கல்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கண்டிப்பாக ராணுவ புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது, அங்கு ஆயுத புரட்சி வெடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் சண்டை நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. கடந்த மாதம் 15-16 தேதிகளில் நடந்த இந்த சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தியா இதை முதல் நாளே வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

ஆனால் சீனா இன்னும் தங்கள் தரப்பில் எத்தனை பேர் பலியானார்கள் என்று அறிவிக்கவில்லை. சீன அதிபர் ஜிங்பிங் இதில் தொடர்ந்து கள்ள மௌனம் காத்து வருகிறார். இதனால் அவருக்கு எதிராக அந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரித்து வருகிறது.

மோடி காட்டிய வழி.. சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி தடை.. அமெரிக்கா ஆக்சன்!மோடி காட்டிய வழி.. சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி தடை.. அமெரிக்கா ஆக்சன்!

அழுத்தம்

அழுத்தம்

இந்த நிலையில் சீனாவில் கண்டிப்பாக ராணுவ புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது, அங்கு ஆயுத புரட்சி வெடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரின் மகன் ஜியான்லி யாங் இது பற்றி பேசியுள்ளார். தற்போது அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக குரல் கொடுத்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜியான்லி யாங் இந்தியா - சீனா பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

சொன்னது என்ன

சொன்னது என்ன

சீனாவிற்கு வெளியில் இருக்கும் சீனாவின் முக்கியமான தலைவராக இவர் பார்க்கப்படுகிறார். ஜியான்லி யாங் தனது பேட்டியில், சீனாவின் அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அங்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் அரசுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது . அவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய புரட்சியை செய்ய வாய்ப்புள்ளது. ஜிங்பிங் அச்சத்தில் இருக்கிறார்.

ஜிங்பிங் எதிர்ப்பு

ஜிங்பிங் எதிர்ப்பு

சீனாவில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்பதை தெரிவிக்காமல் ஜிங்பிங் மறைத்து வருகிறார். இந்தியாவை விட அங்கு அதிக வீரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அவர் உண்மையான எண்ணிக்கையை வெளியிட பயப்படுகிறார். தனது நாட்டில் புரட்சி வெடிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அவரின் சைனீஸ் கம்யூனிஸ்ட் கட்சியினரே தற்போது ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள்.

ராணுவம் முக்கியம்

ராணுவம் முக்கியம்

சீனாவின் அரசில் ராணுவத்தின் பங்குதான் அதிகம். ராணுவத்திற்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும். ராணுவத்திற்கு எதிராக ஜிங்பிங் செயல்பட தொடங்கி உள்ளார். இது கண்டிப்பாக அவருக்கு நல்லது அல்ல. பிஎல்ஏ ராணுவத்தில் இருக்கும் பலர் ஏற்கனவே ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் ஜிங்பிங் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்குவார்கள்

முன்னாள் அதிகாரிகள்

முன்னாள் அதிகாரிகள்

அதேபோல் சீனாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசி வருகிறார்கள். இந்தியாவுடன் சீனா மோதியதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் இவர்கள் எல்லாம் ஜிங்பிங்கிற்கு எதிராக கலகம் செய்ய வாய்ப்புள்ளது. பிஎல்ஏ ராணுவத்தை பல காலமாக ஜிங்பிங் ஒடுக்கி வருகிறார். இப்போது அங்கு நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்பதை கூட ஜிங்பிங் சொல்லவில்லை. மக்கள் எல்லோரும் கொதித்து போய் இருக்கிறார்கள். மொத்தம் சீனாவின் பிஎல்ஏ ராணுவத்தில் 5.7 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் ஆட்சியை, அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை, என்று ஜியான்லி யாங் தெரிவித்துள்ளார்.

English summary
China standoff with India: Beijing may see the army regime soon against XI says dissident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X