For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிஸ்க் எடுக்க தயாரான இந்தியா.. "ராஜாங்க உறவுகளை" கண்டு நடுங்கிய சீனா.. வெளிப்படையாக வைத்த கோரிக்கை!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்காவுடன் ராஜாங்க ரீதியாக இந்தியா நெருக்கம் காட்டி வரும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை தற்போது சீனா நேரடியாக விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவின் ராஜாங்க உறவுகளை பார்த்து சீனா நடுங்கி உள்ளது.

Recommended Video

    ndia-America இடையான உறவுவை கண்டு நடுங்கி கிடக்கும் China | Oneindia Tamil

    இந்தியா - சீனா இடையே நடந்த லடாக் மோதலில் இந்தியாவின் கை எப்போதும் ஓங்கி இருப்பதற்கு காரணம், இந்தியாவின் தீவிரமான ராஜாங்க கொள்கைதான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, இங்கிலாந்து என்று உலக சாம்ராஜ்யங்களை எல்லாம் இந்தியா தனது கூட்டாளியாக்கி உள்ளது.

    இதனால்தான் எல்லையில் அத்துமீறிய சீனாவும் கூட, தற்போது அமைதியாகி உள்ளது. எல்லையில் சீனா எதுவும் செய்வதற்கு முன் தயக்கம் காட்டுவதற்கு காரணம், இந்தியாவின் இந்த ராஜாங்க பலம்தான் என்கிறார்கள்.

    துருவாஸ்டிரா.. இரவோடு இரவாக இந்தியா செய்த 3 ஏவுகணை சோதனை.. சத்தமின்றி நடத்தப்பட்ட அதிரடி மூவ்! துருவாஸ்டிரா.. இரவோடு இரவாக இந்தியா செய்த 3 ஏவுகணை சோதனை.. சத்தமின்றி நடத்தப்பட்ட அதிரடி மூவ்!

    சொன்னது என்ன

    சொன்னது என்ன

    இந்த நிலையில் இந்தியாவின் வெளியுறவுத்துறையின் கொள்கை குறித்து சீனா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கும் கருத்தில், இந்தியா சுதந்திரமான, தன்னிச்சையான முடிவு எடுக்கும் நாடாக இருக்க வேண்டும். இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தவறான முடிவுகளை எடுக்க கூடாது. உலக நாடுகள் உடன் கூட்டு சேரும் முன் இந்தியா கவனமாக செயல்பட வேண்டும்.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    உலகில் இருக்கும் முன்னேறிய நாடுகளில் இந்தியாவும் முக்கியமான ஒரு நாடாகும். இந்தியா இதனால் சுதந்திரமான கொள்கைகளை கொண்டு இருக்க வேண்டும். முக்கியமாக, இந்தியா உலக அமைதிக்கும், ஆசிய அமைதிக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதற்கு ஏற்றபடி தனது கொள்கைகளை இந்தியா வகுக்க வேண்டும், என்று சீனாவின் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

    என்ன நடுக்கம்

    என்ன நடுக்கம்

    சீனா கிட்டத்தட்ட இந்தியாவிடம், "வேறு யாரோடும் சேராதீர்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளது. அதாவது அமெரிக்கா போன்ற நாடுகள் உடன் சேராதீர்கள் என்று இந்தியாவிடம் சீனா வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளது. அமெரிக்காவுடன் இந்திய பெருங்கடலில் இந்தியா போர் பயிற்சி செய்ததை அடுத்து சீனா இப்படி கூறியுள்ளது. இந்தியா ஜப்பான்,ஆஸ்திரேலியா உடனும் போர் பயிற்சி செய்ய உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    சீனாவின் இந்த கோரிக்கைக்கும், அச்சத்திற்கும் பின் இன்னொரு காரணம் உள்ளது. இந்தியா ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறது என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதுதான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். கடந்த செவ்வாய் கிழமை, அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், இந்தியா எப்போதும் நடுநிலையாக செயல்பட்டு வந்தது. உலக நாடுகளின் மோதலில் இந்தியா அணி சேரவில்லை.

    முன்பு எப்படி

    முன்பு எப்படி

    இதற்கு முன் இந்தியா எப்போதும் அணி சேர்ந்தது இல்லை. ஆனால் இனிமேல் இந்தியா அப்படி இருக்க முடியாது. அதற்கான காலங்கள் மாறிவிட்டது. இந்தியா எப்போதும் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க முடியாதது. இந்தியா தற்போது சில ரிஸ்குகளை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது என்று அவர் கூறினார். அவரின் இந்த பேட்டிதான், சீனாவை நடுங்க வைத்து, இப்படி அறிக்கை வெளியிட வைத்துள்ளது என்கிறார்கள்.

    English summary
    China standoff with India: Beijing says Delhi to be independent in multi-level foreign policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X