For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த '800 மீட்டர்' நிலப்பரப்புக்குதான்.. கால்வானில் இந்தியாவுடன் சீனா மோதுவதன் பின்னணி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கால்வான் பள்ளத்தாக்கில் சீனா பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மையில் சீனா இந்தியாவிடம் புதிதாக பிரச்சனை எழுப்பி வருவது 800 மீட்டர் நிலப்பரப்பிற்கு தான் என்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

    'China மீண்டும் வருவார்கள்' -Indian Army எச்சரிக்கை | India China Border

    கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட் 14 இலிருந்து இந்திய மற்றும் சீன இராணுவ நிலைகள் ஓரளவிற்கு படைகளை விலக்கி கொண்டு பின்வாங்கி உள்ளன., சீனா இதுவரை எவ்வளவு பகுதியை ஆக்கிரமித்து உரிமை கோரியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில், ரோந்து பாய்ண்ட் 14 இலிருந்து இந்தியப் பகுதியில் உள்ள 800 மீட்டர் நிலப்பரப்பை தங்களுக்கு சொந்தம் என சீனா வெளிப்படையாக உரிமை கோருகிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது

    1962ல் கை ஓங்கியிருக்கலாம்.. ஆனால் இப்ப அப்படி இல்லை..உணர்த்திய இந்தியா.. பின்வாங்கிய சீனா1962ல் கை ஓங்கியிருக்கலாம்.. ஆனால் இப்ப அப்படி இல்லை..உணர்த்திய இந்தியா.. பின்வாங்கிய சீனா

    61 ஆண்டு வரலாறு

    61 ஆண்டு வரலாறு

    சீன வெளியுறவு அமைச்சகம் கால்வான் பள்ளத்தாக்கு விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு ராணுவ அதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் 800 மீட்டர் பரப்பளவைத்தான் முதல்முதலாக உரிமை கோரியது. கால்வான் பள்ளத்தாக்கில் உண்மையிலேயே இதுதான் எல்லைக்கோடு என்று இருநாடுகளும் வரையறுக்கவில்லை. இப்போது உள்ள எல்லைக்கோடு என்பது கற்பனைக்கோடாகவே பார்க்கப்பட்டது. 61 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றை திருப்பி பார்த்தால் சில விஷயங்கள் தெளிவாக தெரிய வந்துள்ளது.

    பிரச்சனைக்கு காரணம்

    பிரச்சனைக்கு காரணம்

    1959 ஆம் ஆண்டில், இந்தியாவும் சீனாவும் ரோந்து பாய்ண்ட் 14 வரை பரஸ்பரம் எல்லையாக ஒப்புக் கொண்டன. அதன்பிறகு இது நாள் வரை அங்கு பிரச்சனை எழுந்தது இல்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் முதன் முதலாக சீனர்கள் 800 மீட்டர் நிலப்பரப்பிற்கு உரிமை கோரியுள்ளனர். இது தான் பிரச்சனைகளுக்கு காரணமாகி உள்ளது.

    சீன படைகள் விலகல்

    சீன படைகள் விலகல்

    ஏனெனில் 1962 ம் ஆண்டு ஒரு செய்தித்தாள் பேனர் தலைப்பு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த தலைப்பில் 'சீன துருப்புக்கள் கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து விலகுகிறார்கள்' என்றும், 'டெல்லி எச்சரிக்கை விடுத்துள்ளது' என்று இருக்கிறது. இப்படி ஒரு செய்திகள் வந்து 91 நாட்களுக்குப் பிறகு, 1962 போர் வெடித்தது. அத்துடன் கால்வான் பள்ளத்தாக்கு, சீனப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

    சீனாவின் தந்திரங்கள்

    சீனாவின் தந்திரங்கள்

    2020 ஆம் ஆண்டு மிகவும் வித்தியாசமானது. இப்போது இந்தியா வலிமையாக உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக சீனாவை எச்சரித்தது. இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. தற்போதைய நிலையில் லடாக் மீது எல்லா ஊடகங்களின் பார்வையும் உள்ளது. ஆனால் லடாக்கில் சீனா படைகளை பின் வாங்கி கொண்டு சென்றுள்ளது. ஆனால் அதே நேரம் மற்ற இடங்களில் சீன மோதலில் இறங்கி உள்ளது. வடக்கு சிக்கிமில் இந்திய இராணுவத்துடன் மீண்டும் மீண்டும் மோதியுள்ளளது. நேபாள பிரச்சனை என்பது சீனா தந்திரத்துடன் இந்தியாவிற்கு எதிராக அந்நாட்டை திருப்பிடவிட்டிருப்பது தெரியவந்துள்ளது

    இந்தியா எச்சரிக்கை

    இந்தியா எச்சரிக்கை

    இதனிடையே சீனா, எல்லையில் தனது படைகளை கொஞ்சம் விலகி இருக்க உத்தரவிட்டிருந்தாலும், பின்னாளில் பிரச்சனை எழுப்ப வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த கால செயல்பாடுகளை பார்க்கும் போது சீனாவை நம்ப இயலாது. இனி வரும் நாட்களில் இந்தியா சீனா இடைய அதிக அளவில் பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுமூக உடன்பாடுகள் எட்டப்பட்டால் பிரச்சனைகள் சரியாக வாய்ப்பு உள்ளது. ஆனால் அதேநேரம் எதிர்பார்க்காத சூழலில் திடீரென மோதலில் ஈடுபட்டு எல்லையை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்பும் இருப்பதால் இந்தியா எச்சரிக்கையுடன் உள்ளது. இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடைய பலமுறை நடந்த பேச்சுவார்த்தையின் போது ராஜதந்திர ரீதியில் இந்த பிரச்சனை சரி செய்யப்படாமல் போனது வியப்பான ஒன்று.

    English summary
    China has been explicitly staking claim to territory up to 800 metres into the Indian side from Patrol Point 14.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X