For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பு கணக்கு போடாதீர்கள்.. பாக்.சொன்ன அதே வார்த்தை.. இந்தியாவிற்கு எதிராக சீனா வெளியிட்ட ஷாக் மெசேஜ்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவிற்கு எதிராக இந்தியா தப்பு கணக்கு போட வேண்டாம் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக சீனா முதல் முதலாக இப்படி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்தியா சீனா இடையிலான எல்லை மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிலும் நேற்று பிரதமர் மோடி லடாக் எல்லைக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்தது சீன வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது சீனாவின் ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணத்தை அடுத்து சீனா தொடர்ந்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இந்தியாவின் அதிரடிகளுக்கு பயந்து தொடர்ந்து அடுத்தடுத்துசீனா அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

 இந்தியா சீனா 1962 போர்: ஆமா.. இந்திரா, ஜெயலலிதா, சாவித்திரி கொடுத்த நகைகள் என்னவானது? இந்தியா சீனா 1962 போர்: ஆமா.. இந்திரா, ஜெயலலிதா, சாவித்திரி கொடுத்த நகைகள் என்னவானது?

மீண்டும் அறிக்கை

மீண்டும் அறிக்கை

நேற்று சீனா இந்தியாவிற்கு எதிராக முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. அதில், அண்டை நாடுகளுடன் எந்த விதமான ஆக்கிரமிப்பு செய்யாமல், முறையாக பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்னையை சீனா முடிவிற்கு கொண்டு வந்து இருக்கிறது. ஆனால் இந்தியா, சீனாவை விமர்சனம் செய்கிறது வருகிறது. இந்தியாவின் இந்த செயல் தவறு. அதிலும் அண்டை நாடுகள் மீது சீனா ஆக்கிரமிப்பு செய்வதாகச் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று சீனா கூறியது. தற்போது இந்தியாவிற்கு எதிராக இன்னொரு அறிக்கையை சீனா வெளியிட்டுள்ளது.

மீண்டும் என்ன சொன்னது

மீண்டும் என்ன சொன்னது

இன்று சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவிற்கு எதிராக இந்தியா தப்பு கணக்கு போட வேண்டாம். எல்லையில் பிரச்சனை நிலவி வரும் நிலையில் சீனாவின் சேவைகளுக்கு இந்தியா தடை விதிப்பது தவறான முடிவு. இரண்டு நாடுகளும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்த கூடிய எந்த முடிவையும் எடுக்க கூடாது. இந்தியாவின் சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை ஈடுபடுத்த முடியாது என்று இந்தியா கூறியுள்ளது.

தவறான முடிவு

தவறான முடிவு

இந்தியாவின் இந்த முடிவு மிகவும் தவறானது. இந்தியாவின் அரசியல்வாதிகள் சிலர் கடந்த சில நாட்களாக பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்கள். இந்தியா - சீனா இடையிலான உறவு முறியும் வகையில் தீங்கு விளைவிக்கும் வகையில் அவர்கள் பேசி வருகிறார்கள். இரு நாட்டு உறவை பாதுகாப்பது இரண்டு நாடுகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இணைந்து பயணிக்க வேண்டும்

இணைந்து பயணிக்க வேண்டும்

சீனாவுடன் சேர்ந்து இந்தியா பணியாற்ற வேண்டும். அப்போதுதான் இரண்டு நாட்டு உறவை சரி செய்ய முடியும். இரண்டு நாடுகளும் எல்லை பிரச்சனையில் வெற்றிபெற வேண்டும். பேச்சுவார்த்தை மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். செயற்கையாக இரண்டு நாட்டு உறவில் இந்தியா தொடர்ந்து முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. சீனாவின் வியாபாரத்தை பாதுகாக்க அனைத்து விதமான விஷயங்களையும் நாங்கள் செய்வோம்.

முக்கியமான கட்டம்

முக்கியமான கட்டம்

இரண்டு நாடுகளும் தற்போது வளர்ச்சி மீது குறிக்கோளாக இருக்க வேண்டிய நேரம். வரலாற்று ரீதியாக நாம் பெரும் வளர்ச்சியை நோக்கி இருக்கிறோம். இதனால் பரஸ்பர உறவு, நம்பிக்கையை மற்றும் மரியாதையை நாம் பேண வேண்டும். அதை விடுத்து கெட்ட வழிகளில் யாரும் பயணிக்க கூடாது. இரண்டு நாடுகளின் அடிப்படை குறிக்கோளில் இருந்து விலகும் விஷயங்களை செய்ய கூடாது, என்று சீனா கூறியுள்ளது.

பாகிஸ்தான் சொன்னது

பாகிஸ்தான் சொன்னது

இந்த வாக்கியம் ஒரு காலத்தில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியது ஆகும். 2018ல் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தொடர்ந்து எல்லையில் ஆக்ரோஷமாக இருக்கிறது. அமைதியை குலைக்கும் வகையில் இந்தியா செயல்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தப்பு கணக்கு போடக்கூடாது. அது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தானின் அதே வாக்கியத்தை தற்போது சீனா பயன்படுத்தி உள்ளது.

English summary
China standoff with India: Don't miscalculate things says Beijing to Delhi in new report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X