For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக தென்சீன கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

Recommended Video

    போர் ஒத்திகையை தொடங்கிய China.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்

    லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. அதிலும் கல்வான், பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங் ஆகிய பகுதிகளில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

    அங்கு படைகளை குவித்து சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் மட்டும் சீனா இப்படி மோதலை கடைபிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் வேறு சில நாடுகள் உடனும் எல்லையில் சீனா மோதலை கடைபிடித்து வருகிறது.

    ஆபரேஷன் அந்தமான்.. இந்தியாவிடம் ஜப்பான் சொன்ன ஆபரேஷன் அந்தமான்.. இந்தியாவிடம் ஜப்பான் சொன்ன "அந்த" திட்டம்.. இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு செக்!

    தென் சீன கடல் எல்லை

    தென் சீன கடல் எல்லை

    அதன்படி சீனா தற்போது தென் சீன கடல் எல்லையில் அண்டை நாடுகளுடன் மோதி வருகிறது. தென் சீன கடல் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகள் மீது சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. தென் சீனாவின் அருகே இருக்கும் கடல் பகுதியை மலேசியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகிறது.

    சீனாவின் கவனத்திற்கு காரணம்

    சீனாவின் கவனத்திற்கு காரணம்

    இங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம்.ஏற்கனவே இங்கு மலேசியாவும் எண்ணெய் எடுக்கிறது. சீனாவும் எண்ணெய் எடுக்கிறது. இந்த கடல் பகுதியை மொத்தமாக கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. அதாவது மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. இதுதான் அங்கு சண்டைக்கு காரணம்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    இதில் எப்போதோ அமெரிக்கா உள்ளே நுழைந்து விட்டது. ஆமாம் ஒரு இடத்தில் எண்ணெய் இருந்தால் அங்கு அமெரிக்கா தலையிடாமல் இருக்குமா ?!. தென் சீன கடல் எல்லையில் சீனாவின் செயலுக்கு தடையாக அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு உதவி செய்தது. அங்கு அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முக்கியமாக அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வியாட்நாம், மலேசியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது.

    படைகள்

    படைகள்

    அங்கே அமெரிக்கா கடற்படையை அனுப்பி உள்ளது. அமெரிக்காவின் மூன்று போர் கப்பல்கள் அங்கே இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அங்கே இரண்டு போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தென் சீன கடல் எல்லையில் சீனாவின் கடற்படை தீவிரமான போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த செயல் காரணமாக தென்சீன கடல் எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

    ஐந்து நாள் பயிற்சி

    ஐந்து நாள் பயிற்சி

    மொத்தமாக ஐந்து நாட்கள் கடற்படை போர் பயிற்சியை சீனா அங்கே செய்ய உள்ளது. அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை நடுங்க வைக்கும் வகையில் சீனா தீவிரமாக போர் ஒத்திகையை செய்து வருகிறது. தனது நவீன போர் கப்பல்களை வைத்து அங்கு தீவிரமாக சீனா போர் பயிற்சிகளை செய்து வருகிறது. அதிலும் வியட்நாம் பகுதியில் எல்லை மீறி சீனா பயிற்சிகளை செய்து வருகிறது.

    புகார் என்ன

    புகார் என்ன

    ஏற்கனவே ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகளிடம் சீனாவிற்கு எதிராக வியட்நாம் புகார் அளித்துள்ளது. ஆசியா நாடுகள் இடையே சீனா பதற்றத்தை ஏற்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஏசியன் குழுவில் புகார் அளித்துள்ளது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.

    English summary
    China starts war drills in the South China Sea amid raise in Tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X