பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங்
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 சீன நாட்டவர்கள் பலியாகினர். பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியும் 2 குழந்தைகளின் தாயுமான பெண் ஒருவரே இத்தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சீனர்கள் கொல்லப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அர்சு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு கொரோனா உறுதி..! 3 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு!

3 சீனர்கள் பலி
பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக் கழகத்தில் கன்பூசியஸ் ஆய்வு மையத்தில் சீன மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு மையம் அருகே தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கன்பூசியஸ் ஆய்வு மையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்ட வேன் ஒன்றை தற்கொலைதாரி வெடிக்க வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 சீனர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவம் பாகிஸ்தான், சீனாவை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

சீனா கோபம்
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் சீனர்கள் வீணாக ரத்தம் சிந்துவதை அனுமதிக்க முடியாது; இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசப்பட்டிருக்கிறது சீனா. இதனிடையே இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
|
பலுசிஸ்தான் தீவிரவாதிகள்
பலுசிஸ்தான் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனிநாடாக பிரிய வேண்டும் என்ற கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தை இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் இயக்கத்தின் மஜீத் பிரிகேட் இத்தற்கொலை தாக்குதலை நடத்தியது. பலுசிஸ்தான் மாகாணத்தில் சீனா, பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்ந்தால் எங்கள் தாக்குதல்களும் தொடரும் என தெரிவித்துள்ளது.

தற்கொலைதாரி பெண்
இந்நிலையில் கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது ஒரு பெண் என்றும் அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.கராச்சி தற்கொலைதாரியின் பெயர் Shari Baloch (வயது 30). இவர் எம்.எஸ்.சி. விலங்கியல் பட்டம் படித்தவர்; 2 குழந்தைகளுக்கு தாய். தற்கொலைதாரியின் கணவர் ஒரு மருத்துவர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.