11 லட்சம் பரிசு தர்றாங்களாம்.. கொரோனா பற்றின தகவல் தேவை.. அதிரடி அறிவிப்பு வெளியிட்ட நகரம்
பீஜிங்: கொரோனா பரவல் குறித்து தகவல் கொடுத்தால் கிட்டத்தட்ட 11.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஒரு நாடு அறிவித்துள்ளது.. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
முதன்முதலில் கொரோனாவைரஸ் பரவல் சீனாவில்தான் ஆரம்பமானது.. அங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. எனினும், முதலில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததும் சீனாதான்.
அதனால் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரமாகவே அந்த நாடு திரும்பிவிட்டது... குறிப்பாக, தன்னுடைய நாட்டின் பொருளாதார விஷயத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்து கொண்டது.
போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ

2வது அலை பரவல்
2வது அலை பரவல் உலகத்தையே மிரட்டினாலும்கூட, சீனாவில் 2வது அலை பாதிப்பு வரவே இல்லை. ஆனால், சமீப காலமாகவே தொற்று அங்கு உயர்ந்து வருகிறது.. இதற்கு முக்கிய காரணமாக சுற்றுலா பயணிகளாக இருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், டெல்டா வகை வைரஸ் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவில் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஹாட்ஸ்பாட்டாக இஜினா நகரம் அறிவிக்கப்பட்டு அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது... டெல்டா வைரஸ் பரவல் இங்குதான் அதிகமாக போகிறதாம்.

தடுப்பூசிகள்
இதைதவிர, நிங்சியா, பீஜிங், ஹூனான் ஆகிய மாகாணங்களிலும் புதிய வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன... சீனாவின் மக்கள்தொகையில் சுமார் 75 சதவிகிதம், அதாவது நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது அந்த நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள்
இதுபோக, தலைநகர் பீஜிங்கில் யாருமே நுழைய கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாங்ஃபுயுவான் என்ற பகுதியும் மொத்தமாக மூடப்பட்டுள்ளது... இந்நிலையில், புது அறிவிப்பு ஒன்று அந்த நாட்டில் இருந்து வெளியாகி உள்ளது.. அதாவது கொரோனாவைரஸ் பரவ தொடங்கிய பகுதிகள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று சீனாவில் உள்ள ஒரு நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.. காரணம், இப்போதைக்க சீனாவில் கிட்டத்தட்ட 20 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவியுள்ளது.

அதிகரிப்பு
இதனால் தினசரி கொரோனா கேஸ்கள் இரட்டை இலக்க எண்களாக உயர்ந்து வருகின்றன.. இன்றைய தினம் மட்டும் 43 ஆக கொரோனா தொற்று உயர்ந்துள்ளது.. எனவேதான் புது புது முயற்சிகளை எடுத்து கட்டுப்படுத்த சீனா முயன்று வருகிறது.. அந்த வகையில், சீனா - ரஷ்யா எல்லை பகுதியில் ஹெய்ஹெ நகர நிர்வாகம், சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

மீன்பிடித்தல்
கொரோனா வைரஸ் பரவல் குறித்து யாராவது தகவல் வந்தால் அவர்களுக்கு 100,000 யுவான் அதாவது நம்ம ஊர் ரூபாய் மதிப்பில் சுமார் 11.58 லட்சம் பரிசு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, சட்டவிரோதமாக வேட்டையாடுதல், எல்லை தாண்டி கடத்தல் செயல்களில் ஈடுபடுதல், எல்லை தாண்டி மீன்பிடித்தல் குறித்து உடனடியாக தகவல் தர வேண்டுமென்றும் அந்த நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது... இதைதவிர, ஆன்லைன் மூலம் எந்த பொருள் இறக்குமதி ஆனாலும் அவைகளை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளது.