For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கு பாஸ்.. சீனா அசத்தல் தகவல்

Google Oneindia Tamil News

பீஜிங்: நீண்ட நேரம் மூக்குக் கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சீன மருத்துவமனை ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா நோயாளிகளைக் கொண்டு சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனை சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இவர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில், நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா இறப்பு...ஒரு சதவிகிதமாக குறைக்க முயற்சி...மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!! நாட்டில் கொரோனா இறப்பு...ஒரு சதவிகிதமாக குறைக்க முயற்சி...மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!!

கண் கண்ணாடி

கண் கண்ணாடி

அதாவது ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். சிலருக்கு அடிக்கடி முகம், கண்களை தொடும் பழக்கம் இருக்கிறது. கண்ணாடி அணிவதன் மூலம் கண்களை தொடுவது குறைகிறது. இதன் மூலம், கண்கள் வழியாக கொரோனா வைரஸ் செல்வது தடுக்கப்படுகிறது.

உறுதி

உறுதி

இதை மேலும் உறுதி செய்தவற்கு பல்வேறு ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இந்த ஒரு ஆய்வை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது'' என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக ஷீல்டு

முக ஷீல்டு

இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்து இருக்கும் கருத்தில், ''இந்த ஆய்வுக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வின் மூலம் கொரோனாவில் இருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள பொதுவெளியில் வரும்போது கண்ணாடி அல்லது முகத்தை மறைக்கும் வகையில் ஷீல்டு அணியலாம்'' என்றார்.

முந்தைய ஆய்வுகள்

முந்தைய ஆய்வுகள்

கண்கள் வழியாகவும் கொரோன வைரஸ் மனித உடலுக்குள் செல்லும் என்று முந்தைய ஆய்வுகளும் கூறி இருந்தன. இந்த நிலையில்தான் இந்த ஆய்வும் வெளியாகியுள்ளது.

கண்களில் வைரஸ்

கண்களில் வைரஸ்

முகத்தை தொடும் போது அல்லது கண்களை தொடும்போது நமது கைககளில் இருக்கும் வைரஸ் கண்கள் வழியாக மனித உடலுக்குள் செல்லும் என்று கூறப்பட்டு வந்தது. இதனால் கைகளை முகத்தில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

English summary
China study finds that wearing glasses will protect from Coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X