For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எபோலாவிற்கு தடுப்பு மருந்து ரெடி – மருத்துவ சோதனைகளை தொடங்க போகுது சீனா!

Google Oneindia Tamil News

பீஜிங்: மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மக்களை அச்சுறுத்தி வருகின்ற கொடிய நோயான எபோலோவிற்கான தடுப்பு மருந்தினை சீனா கண்டு பிடித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில் 7000 க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய எபோலா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொடிய எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய தடுப்பு மருந்தை இம்மாத இறுதியில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய உள்ளது சீனா.

China to test its Ebola vaccine on humans

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன், "சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைசிறந்த ஆராய்ச்சி அலகுகளில் ஒன்றான இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியால் இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமும், ராணுவ அதிகாரிகளும் சமீபத்தில் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்துள்ளதால் இந்த மாதத்தில் இதற்கான மருத்துவ சோதனைகள் தொடங்கும்" என்றார்.

எபோலா தடுப்பு மருந்தினை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தும் உலகின் மூன்றாவது நாடு சீனா என்பதும், இது உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எபோலா தடுப்பு மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
China on Thursday said it has developed a vaccine to combat the spread of deadly Ebola virus that has killed more than 7,000 people in three West African countries, and the test of the drug on humans would begin this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X