For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் சீனக் கடலில்...ஏவுகணை வீசி...அமெரிக்காவுக்கு பீஜிங் எச்சரிக்கை!!

Google Oneindia Tamil News

பீஜிங்: தென் சீனக் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தென் சீனக் கடலில் ஏற்கனவே உருவாகி இருக்கும் சர்ச்சைகளுக்கு இந்த சம்பவம் தீனி போட்டது போல் உருவெடுத்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் நேற்று இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவி இருப்பதாக அந்த நாட்டில் இருந்து வெளியாகும் தென் சீன மார்னிங் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. DF-26B, DF-21D என்ற இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியுள்ளது. சீனாவின் குயின்காய் மாகாணத்தில் இருந்து ஒன்றையும், ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து மற்றொரு ஏவுகணையையும் ஏவியுள்ளது. இந்தப் பகுதியில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுமாறு இந்த ஏவுகணைகளை சீனா ஏவி இருப்பதாக கூறப்படுகிறது.

China threatens America by firing 2 missiles in South China Sea

இதற்கு பதிலடி கொடுத்து இருக்கும் அமெரிக்க பாதுகாப்புப் படைக்கான தலைமை அதிகாரி மார்க் எஸ்பர், ''சீனா தொடர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் சர்வதேச சட்ட ஒப்பந்தங்களை மீறி வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் சீன ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, அமெரிக்காவின் யு 2 ரக உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டி இருந்தது. அமெரிக்க உளவு விமானம் பறந்த பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்றும், சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி அமெரிக்கா சீனா எல்லைக்குள் நுழைந்து வேவு பார்க்கிறது என்று சீனா தெரிவித்து இருந்தது.

இதையடுத்து பேட்டி அளித்து இருந்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவ் லிஜியன், ''அமெரிக்காவின் இந்த செயல் சீனாவை தூண்டுவதாக இருக்கிறது. இதுபோன்ற செயல்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று எச்சரித்து இருந்தார்.

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. மீனாட்சி ஆச்சி இறந்த 48 மணி நேரத்திற்குள் ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்..!மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. மீனாட்சி ஆச்சி இறந்த 48 மணி நேரத்திற்குள் ஏ.ஆர்.லட்சுமணன் மரணம்..!

சீனா ஏவிய ஏவுகணைகளில் DF-26 மேற்கு பசிபிக் மற்றும் இந்திய கடல் பகுதியை தாக்கும் திறன் படைத்தது. அதாவது, 2800 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது. DF-21 ஏவுகணை, தென் சீனக் கடல் பகுதியில் நகர்ந்து கொண்டு இருக்கும் கப்பல்களையும் குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது. இந்த செயல் தற்போது அமெரிக்கா, சீனா இடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
China threatens America by firing 2 missiles in South China Sea
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X