For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிமையானவரை போதும்.. இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை செல்போன் கேமுக்கு தடை.. சீனா செம அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஹாங்காங் : சீனாவில் வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு வீடியோ கேம்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆன்லைன் கேம்களை விளையாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வயதினர் இத்தகைய விளையாட்டுகளுக்கு ஆன்லைனில் பணப் பறிமாற்றம் செய்யவும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையினரின் உதவியுடன் இளைஞர்களின் இத்தகைய செயல்பாடுகளை கண்காணிக்கவும் சீன அரசு அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

காருக்குள் டிரைவரோடு சேர்ந்து 2 பேர்.. லாக் செய்யப்பட்டது கதவு.. 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவஸ்தைகாருக்குள் டிரைவரோடு சேர்ந்து 2 பேர்.. லாக் செய்யப்பட்டது கதவு.. 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவஸ்தை

அடிமையாகும் குழந்தைகள்

அடிமையாகும் குழந்தைகள்

சீனாவில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் வீடியோ கேம்களுக்கு அந்நாட்டு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் அடிமையாவதாக தெரியவந்துள்ள நிலையில், இத்தகைய விளையாட்டுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சீனா அறிவித்துள்ளது. சீன இளைஞர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தை பாதுகாக்கும்வகையில் ஆன்லைன் வீடியோ கேம்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இந்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கண்காணிக்க நடவடிக்கை

கண்காணிக்க நடவடிக்கை

இளைஞர்கள் தங்களின் உண்மையான பெயர்களுடன் இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை மேற்கொள்வது குறித்து கண்காணிக்க காவல்துறையுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2017ல் வீடியோ கேம்களுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்தது. இதுகுறித்து கவலை தெரிவித்த சீன அரசு, இதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டில் பீஜிங்கில் அறிவித்திருந்தது.

உலக சுகாதார மையம் அறிவிப்பு

உலக சுகாதார மையம் அறிவிப்பு

இவ்வாறு ஆன்லைன் வீடியோ கேம்களை தொடர்ந்து விளையாடுவதால் இணைய விளையாட்டு குறைபாடு என்ற நோய் பாதிப்பு வரும் என்று கடந்த ஆண்டில் உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது. இந்த நோயை முதல் முறையாக உலக சுகாதார மையம் சர்வதேச அளவில் கவனத்தில் கொண்டுவந்தது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள், தங்களது பள்ளி மற்றும் குடும்பத்தினர்மீது அதிக அக்கறை காட்டாமல் தனித்து இருக்கவே விரும்புவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட சீன பல்கலைகழகம் இந்த நோயால் அதிகளவில் ஆண்களே பாதிப்படைவதாக தெரிவித்திருந்தது.

நேரத்தில் கட்டுப்பாடுகள்

நேரத்தில் கட்டுப்பாடுகள்

இந்நிலையில் ஆன்லைன் கேம்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரை 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் கேம்கள் விளையாட முடியாது. மேலும் வாரநாட்களில் அதிகபட்சம் 90 நிமிடங்களும் வார இறுதிநாட்களில் அதிகபட்சமாக 3 மணிநேரங்களும் மட்டுமே இவர்கள் விளையாடலாம்.

டென்சென்ட் நிறுவனத்திற்கு கட்டுப்பாடு

டென்சென்ட் நிறுவனத்திற்கு கட்டுப்பாடு

மேலும் இத்தகைய வீடியோ கேம்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் குறிப்பாக தங்களது நாட்டு குழந்தைகளை அதிகளவில் வீடியோ கேம்களுக்கு அடிமையாக்கிவரும் டென்சென்ட் நிறுவனத்தின் கேம்களுக்கு சீனா அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

English summary
China imposing curfew on video gaming to prevent addiction of children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X