For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சொர்க்கத்திற்கான கேள்விகள்' செவ்வாய்க்கு போகும் சீனாவின் ரோவர்.. அமெரிக்காவும் அசத்தல் பெயர்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா இந்த வாரம் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை ஏவப்போகிறது. ஒரே நேரத்தில் அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் செவ்வாய்க்கு போட்டி போட்டு விண்கலம் அனுப்ப காரணங்கள் இல்லாமல் இல்லை.

Recommended Video

    America-க்கு போட்டியாக செவ்வாய்க்கு China அனுப்பும் விண்கலம்

    பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மிகவும் ஆர்வம் காட்டுகின்றன. அதுவும் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரே நேரத்தில் விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு கடும் போட்டியுடன் செயல்படுகின்றன.

    சனிக்கிழமையன்று சீனாவும், மற்றும் ஜூலை 30 அன்று அமெரிக்காவும் விண்கலத்தை அனுப்புகின்றன. இதற்கிடையே இவர்களுக்கு முன்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திங்கள்கிழமை செவ்வாய் கிரகத்தை சுற்றி வருவதற்காக விண்கலத்தை அனுப்பி உள்ளது.

    டம்மி கொரோனா வைரஸை உருவாக்கிய அமெரிக்கா.. செம்ம கிராக்கி.. இதனால் என்ன பயன்! டம்மி கொரோனா வைரஸை உருவாக்கிய அமெரிக்கா.. செம்ம கிராக்கி.. இதனால் என்ன பயன்!

    சீனா அதிரடி முயற்சி

    சீனா அதிரடி முயற்சி

    இதில் நாம் பார்க்க வேண்டிய ஒன்று என்றால் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான போட்டியைத்தான். அமெரிக்காவுக்கு நிகராக தன்னை கருதும் சீனா தகவல் தொழில் நுட்பம், விண்வெளி, ராணுவம், உள்கட்டமைப்பு என எல்லாவற்றிலும் பலப்படுத்தி வருகிறது. விண்வெளி துறையில் அமெரிக்காவுடன் போட்டிபோட்டுக்கொண்டு செயல்பட்டு வருகிறது சீனா. அதனால் அமெரிக்கா பாணியில் சீனாவும் செவ்வாய்க்கு spacecraft விண்கலங்களை அனுப்ப உள்ளது.

    செவ்வாய் நெருங்கி வருகிறது

    செவ்வாய் நெருங்கி வருகிறது

    அதுசரி, சரியாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த மூன்று நாடுகளும் இப்போது செவ்வாய்க்கு spacecraft விண்கலத்தை அனுப்ப விரும்புவது ஏன் தெரியுமா? அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகம் ஜூலை மாதம் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதிவரை, இந்த ஒருமாத காலம் பூமியும் செவ்வாய்க் கிரகமும் ஒன்றையொன்று நெருங்கி வருகின்றன. இவை இரண்டுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைவு. பயணிக்கவேண்டிய தூரமும் குறைவு. எனவே தான் பூமியிலிருந்து செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்ப சாதகமான இந்த காலத்தை சரியாக பயன்படுத்த அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் விரும்புகின்றன.

    அமீரகமும் அனுப்புது

    அமீரகமும் அனுப்புது

    இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சீனா செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பப்போவது இதுவே முதல்முறை. முன்னதாக சீனா, நிலாவுக்கு மட்டுமே இரண்டு முறை விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. ஆனால் அமெரிக்கா இதற்கு முன்பு பலமுறை செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது. செவ்வாய்க்கிரகத்திற்கு அமெரிக்கா இப்போது அனுப்பப்போவது 10வது விண்கலம் ஆகும். ஐக்கிய அரபு அமீரகம், இதற்குமுன்னர் விண்வெளி ஆராய்ச்சிக்கு விண்கலங்களை அனுப்பியதில்லை என்றபோதும் அதுவும் இம்முறை இந்த ஆராய்ச்சியில் இணைந்திருப்பது பாராட்டத்தக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நாடுகளின் விண்கலங்களும் அடுத்தவருட முற்பகுதியில் செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உயிரினங்கள் வாழ்ந்தனவா?

    உயிரினங்கள் வாழ்ந்தனவா?

    அமெரிக்கா இம்முறை Perseverance (விடாமுயற்சி) என்ற rover என்ற ஊர்தியை செவ்வாய்க்கிரகத்தில் தரையிறக்க உள்ளது அமெரிக்கா இதற்குமுன்பு அங்கு இறக்கியுள்ள, Curiosity மற்றும் Mars Insight ஆகியவற்றுடன் இந்த Perseverance இணைந்து செயல்படும். இந்த விண்கலம் முதல்முறையாக ‘செவ்வாய்கிரகத்தில் இதற்கு முன்னர் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய உள்ளன. இந்த ஆய்விற்க அமெரிக்கா அனுப்பும் Perseverence விண்கலம் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றையும் சுமந்து செல்ல போகிறது. செவ்வாயில் இது தரையிறங்கி வெற்றிகரமாகப் பறந்து ஆய்வு செய்யுமாம். செவ்வாய்க்கிரகத்தில் ஒரு ( base) தளம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகளையும்இந்த விண்கலம் செய்யப்போகிறதாம். முன்னதாக செவ்வாயில் நீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்பதையே அமெரிக்க விண்கலங்கள் ஆய்வு செய்தன. முதல்முறையாக உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆய்வு செய்யப்போகின்றன.,

    தியான்வென் -1

    தியான்வென் -1

    சீனா எந்த மாதிரியான விண்கலத்தை அனுப்பவிருக்கிறது என்பதை பார்ப்போம். தியான்வென் -1 (Tianwen 1) ("சொர்க்கத்திற்கான கேள்விகள்") என்று பெயரிடப்பட்டுள்ளது.சீனா அனுப்பும் இந்த விண்கலம் மூன்று பகுதிகளைக்கொண்டது. Orbiter என்ற சுற்றும் கலம், lander என்ற இறங்கு கலம், rover என்ற ஊர்தி ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. சீனாவின் மிகப் பெரிய விண்வெளி ராக்கெட் தளமான தெற்கு தீவான ஹைனானில் இருந்து சனிக்கிழமையன்று வானிலை பொறுத்து ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு மாதங்களில் 55 மில்லியன் கிலோமீட்டர் பயணித்த பின்னர் 2021 பிப்ரவரி மாதம் தியான்வென் -1 செவ்வாய் கிரகத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை தியான்வென் -1 விண்கலத்தின் லேண்டர் ஆய்வு செய்யும். இதேபோல் கிரகத்தின் மண்ணை அதன் ரோவர் ஆய்வு செய்யும்

    சீன விண்கலம் எப்படி இறங்கும்

    சீன விண்கலம் எப்படி இறங்கும்

    "சீனாவுக்கான முதல் முயற்சியான இந்த முயற்சியில் , அமெரிக்கா ஏற்கனவே செய்ததைத் தாண்டி இது குறிப்பிடத்தக்க எதையும் செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின் வானியலாளர் ஜொனாதன் மெக்டொவல் தெரிவித்தார். இதனிடையே செவ்வாயில் தரையிறங்குவது, நிலாவில் தரையிறங்குவதைவிட சவாலானது. செவ்வாயின் வளிமண்டலம் (thin) மெல்லியது என்பதோடு, தரையை அண்மிக்கும்போது, இறங்குகலத்தின் வேகத்தைக் குறைத்து கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும் ஆகவே parachute தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இறங்கும்போது timing என்ற காலப்பிரமாணத்தை பயன்படுத்தி சீனாவின் Tianwen 1 விண்கலம் செவ்வாயில் Utopia Planitia என்ற இடத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    china and US countries are taking advantage of a period when Earth and Mars are closest to send their probes, with China's mission due to lift off by Saturday and the US spacecraft on July 30.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X