For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா

லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு தடை விதிதக்கிறது சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: தைவானை ஒரு நாடாகவே கருதுவதில்லை சீனா. மாறாக அதை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சொல்லி வருகிறது. அடாவடி செய்கிறது. சமீபத்தில் கூட பிஜி நாட்டில் ஒரு தைவான் தூதரக அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையைக் கூட உடைத்தனர் சீன அதிகாரிகள். இப்போது போயிங் நிறுவனம் மீது பாயப் போகிறது.

அதாவது தைவான் நாட்டுக்கு லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும், போயிங்கும் இணைந்து பல்வேறு வகையான ஆயுதங்கள், விமானங்களை சப்ளை செய்கின்றனர். இதையடுத்து இந்த இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப் போகிறதாம் சீனா.

 China to sanction US firms over Taiwan arms sale

இரண்டுமே அமெரிக்க நிறுவனங்கள் ஆகும்.. சமீபத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை விற்க இவை தைவான் நாட்டுடன் ஒப்பந்தம் போட்டன... அவ்வளவுதான் கடுப்பாகி விட்டது சீனா.. இதையடுத்து இரு அமெரிக்க நிறுவனங்கள் மீதும் தடை ஆயுதத்தை பிரயோகித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், அமெரிக்கா இந்த ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தடை விதிப்போம் என்று எச்சரித்தார்.. போயிங் நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவுதான் இந்த லாக்கீட் மார்ட்டின் ஆகும்.

திடீரென திடீரென "ஸ்ட்ரேட்டஜி"யை மாற்றிய திமுக.. 5 + 5 சரியா வருமா? என்ன நடக்கிறது கூட்டணியில்?!

தைவானை வைத்து நீண்ட காலமாகவே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது. தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் சீனாவுக்கு கடும்போட்டியாக விளங்குவது தைவான். இதனால்தான் படு கடுப்பாக அது உள்ளது.

ஜாவோ லிஜியன் மேலும் கூறுகையில், எங்களது உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவோ வேறு எந்த நாடோ தலையிட உரிமை இல்லை.. தைவானுக்கு ஆயுத சப்ளை தருவது என்பது எங்களது நாட்டின் மீதான அத்துமீறல் நடவடிக்கையாகும். அதில் ஈடுபட யாருக்கும் உரிமை இல்லை. எங்களது இறையாண்மையை காக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து எடுப்போம் என்றார் ஜாவோ.

புதிய ஒப்பந்தப்படி தைவானுக்கு 135 விண்ணிலிருந்து தரையை நோக்கிப் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் வழங்கும்.. மேலும் 6 எம்எக்ஸ் 110 தாக்குதல் விமானங்கள், 11 எம் 142 நடமாடும் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றையும் லாக்கீட் மார்ட்டின் தரும்.

ஏற்கனவே தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக மார்ட்டின் நிறுவனத்தை சீனா தடை செய்திருந்தது... தற்போது மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கிறது.

English summary
China to sanction US firms over Taiwan arms sale
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X