For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளியான 70 பக்க ரிப்போர்ட்.. இந்தியாவை கட்டுப்படுத்த சீனா போடும் திட்டம்..போகஸை திருப்பும் அமெரிக்கா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன அரசு இந்தியாவை மிகப்பெரிய போட்டியாளராக பார்ப்பதாகவும், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை முறிக்க சீனா தீவிரமாக முயன்று வருவதாகவும் அமெரிக்க அரசின் ரிப்போர்ட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் மோதல் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு கசப்பாக மாறி உள்ளது. இந்த எல்லை பிரச்சனையில், சீனாவை விட இந்தியாவிற்குதான் அமெரிக்கா அதிக ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவில் இருக்கும் பெரும்பான்மையான நாடுகளை கட்டுப்படுத்த சீனா தீவிரமாக முயன்று வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

 இந்தியாவை கட்டுக்குள் கொண்டு வர

இந்தியாவை கட்டுக்குள் கொண்டு வர

அமெரிக்க அரசின் State Department சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் இந்த 70 பக்க அறிக்கையில், இந்தியாவை சீனா பெரிய போட்டியாளராக பார்க்கிறது. அதேபோல் ஏசியான் அமைப்புகளில் இருக்கும் தெற்காசிய நாடுகளை சீனா போட்டியாளராக பார்க்கிறது. இந்த நாடுகளை கட்டுப்படுத்தி, தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ராஜாங்கம்

அமெரிக்காவின் ராஜாங்கம்

தற்போது அமெரிக்காவிற்கு நெருக்கமாக பெரும்பாலான ஆசிய நாடுகள் உள்ளது. இந்த நாடுகளை எல்லாம் அமெரிக்காவின் நட்பில் இருந்து பிரித்து, தனது ஆளுமைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று சீனா நினைக்கிறது.அமெரிக்காவின் சூப்பர் பவர் அங்கீகாரத்தை எப்டியாவது தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சீனா திட்டம் போடுகிறது என்று கூறுகிறார்கள்.

சீனா மட்டுமே இருக்க வேண்டும்

சீனா மட்டுமே இருக்க வேண்டும்

வளர்ச்சி திட்டங்கள் மூலமும், ராணுவ ஆக்கிரமிப்பு மூலமும் இந்த ஆசிய நாடுகளை தனது பக்கம் இழுக்க சீனா முயற்சிக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவின் வேகமாக வளர்ச்சியை, அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கத்தை பார்த்து சீனா கலங்கி போய் உள்ளது. இந்தியாவின் சர்வதேச உறவுகளை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று சீனா நினைக்கிறது என்றும் இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

டார்கெட் யார் - ராணுவ மோதல்

டார்கெட் யார் - ராணுவ மோதல்

ஆசியா மற்றும் ஆசியாவை சுற்றி இருக்கும் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும், வியட்நாம், இந்தோனேசியா, தைவான், இலங்கை போன்ற நாடுகளையும் சீனா கட்டுப்படுத்த நினைக்கிறது.

சூப்பர்

சூப்பர்

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் பவர் நாடாக மாற சீனா நினைக்கிறது. இதனால்தான் ராணுவ ரீதியாக சீனா அண்டை நாடுகளை சீண்டுகிறது என்று இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை சீனா தீவிரவமாக கண்காணிக்கிறது. தேர்தல் முடிவுவகளை பொறுத்து தனது திட்டங்களை மாற்றங்களை செய்யவும் சீனா தயாராக இருக்கிறது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

சீனாவின் இந்த செயலை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிராக அமெரிக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா தொடங்கி பல விஷயங்களில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் ஆபத்தை இன்னும் பல நாடுகள் முழுமையாக உணரவில்லை என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
China trying to cut off India from its powerful allies to take control says US report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X