For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்பலமானது சீனாவின் குள்ளநரித்தனம்.. நேபாளத்தை எப்படி வளைத்தது.. ஊழல் தலைவர்களால்.. பலே பலன்!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளம் போன்ற பொருளாதார ரீதியாக பலவீனமான நாடுகளுக்குள் நுழைய சீனா ஊழல் தலைவர்களைப் பயன்படுத்துவதாக புதிய ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

Recommended Video

    China தயாரிக்கும் அதிநவீன stealth fighter J-20 விமானம்

    அண்மைக்காலமாக சீனா, நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக எல்லை ரீதியாக பிரச்சனைகள் செய்தன. இவ்வளவு நாளாக நட்பு பாராட்டி வந்த நேபாளம் திடீரென உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று பகுதிகளை சொந்தம் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நேபாளம் இப்படி செய்தவற்கு பின்னணியில் சீனா இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆசியாவில் தனக்கு போட்டியா பொருளாதார பலம் கொண்டு இந்தியா வருவதை ஏற்க முடியாத சீனா, எல்லையில் பிரச்சனை செய்து இந்தியாவை கட்டுக்குள் கொண்டுவர விரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சண்டை நடந்தது தற்போது சமாதானத்தில் முடிந்திருக்கிறது.

    சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரிசீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரி

    வளர்ச்சி திட்டங்கள்

    வளர்ச்சி திட்டங்கள்

    சீனாவுடன் திடீரென நேபாளம் கைகோர்க்க காரணம், அங்கு சீனா செய்து வரும் அளப்பரிய முதலீடுகள் தான். நிறைய கடன் மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி அதன் மூலம் சீனா தனது சந்தையாக நேபாளத்தை மாற்ற திட்டமிட்டு வருகிறது. நேபாளத்தில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம்பெறுவதற்காக நிறைய முதலீடுகள் செய்யப்படுகின்றன.

    ஊழல் தலைவர்கள்

    ஊழல் தலைவர்கள்

    நேபாளம் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவின் பல நாடுகள்,பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இதேபோன்ற வேலையைத்தான் சீனா செய்து வருகிறது. இந்தியாவையும் தனது முழு சந்தையாக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் நேபாளம் போன்ற பொருளாதார ரீதியாக பலவீனமான நாடுகளுக்குள் நுழைய சீனா ஊழல் தலைவர்களைப் பயன்படுத்துவதாக புதிய ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

    அரசியலில் ஊடுருவும்

    அரசியலில் ஊடுருவும்

    சீனாவின் இந்த முயற்சிகள். சீன நிறுவனங்களுக்கு நேபாள நாட்டில் தங்கள் வணிக நலன்களை மேலும் மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், சீன அரசு அதன் நீண்டகால செல்வாக்கை உறுதிசெய்யும் நோக்கத்துடன், நாட்டின் அரசியலில் மறைமுகமாக ஊடுருவ உதவுகிறது. இந்த தகவலை குளோபல் வாட்ச் ஒரு ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

    சொத்துக்கள் குவிப்பு

    சொத்துக்கள் குவிப்பு

    நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் தனிப்பட்ட சொத்துமதிப்பு கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் நேபாள பிரதமராக ஓலி முதன்முதலில் பணியாற்றியபோது,நேபாளத்திற்கான அப்போதைய சீனத் தூதர் வு சுண்டாயின் உதவியுடன், கம்போடியாவில் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்வதற்கான செயல்முறையைத் தொடங்கினார் என்று தகவல்கள் வந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    China uses corrupt leaders to make inroads into economically weaker countries like Nepal: suggests a report in Global Watch Analysis
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X