For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவலின் போது ஆசியர்களுக்கு எதிரான இன பாகுபாடும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்ட ஆஸ்திரேலிய நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் என சீனா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சீனாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கொரோனா தொற்றின் எதிரொலியாக ஆசிய நாட்டினர் மற்றும் சீனர்களுக்கு எதிராக இன பாகுபாடும் வன்முறை செயல்களையும் ஆஸ்திரேலியா செய்தது.

China warns against travel to Australia

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சீன சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து சீனா, ஆஸ்திரேலியாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. வுகான் மற்றும் ஹூபெய் மாகாணத்தை சுற்றியுள்ள மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

"சைகலாஜிக்கல் ஆபரேஷனை" கையில் எடுத்த சீனா.. அசால்ட்டாக கையாண்ட இந்தியா.. சாணக்கிய வியூகம்!

Recommended Video

    India China-சண்டைக்கு காரணமே America தான்..சொல்வது சீனா

    இனி 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், கண்காணித்தல் இதெல்லாம் இல்லை என்றும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் தெர்மல் ஸ்கேன்னர் மூலம் உடலின் வெப்பநிலையை கண்டறிதல், மாஸ்க் அணிவது போன்றவற்றை கடைப்பிடிக்கவும் தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது.

    English summary
    China has advised its citizens not to visit Australia, citing racial discrimination and violence against Asians during the coronavirus pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X