For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. "அடுத்து போர்.." சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்!

Google Oneindia Tamil News

பீஜிங்: தைவானுக்கு சுதந்திரம் என்று சொல்வது போர் என்ற நிலையை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்று அமெரிக்காவை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர், தனி நாடாக தைவான் பயணிக்கத் தொடங்கியது. முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் நடைபோட விரும்புகிறது.

ஆனால் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம்தானே தவிர தனி நாடு இல்லை என்று சீனா கூறிவருகிறது.

எதிரே வரும் அஸ்திரத்தை.. அப்படியே திருப்பி ஏவப்போகும் எடப்பாடியார்.. காத்திருக்கு அதிரடி அறிவிப்புஎதிரே வரும் அஸ்திரத்தை.. அப்படியே திருப்பி ஏவப்போகும் எடப்பாடியார்.. காத்திருக்கு அதிரடி அறிவிப்பு

தைவான் வான்வெளி

தைவான் வான்வெளி

இந்த நிலையில்தான், தைவானுடன் டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்கா நட்பை அதிகரித்தது. அமெரிக்கா நெருங்குவதை உணர்ந்த சீனா பதிலடிக்கு ரெடியாகியுள்ளது. கடந்த ஒருவார காலமாக தைவானின் வான்வெளிப் பகுதிகளுக்கு சீனா போர் விமானங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா அதிரடி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அமெரிக்கா. தைவானின் பாதுகாப்பை உறுதி செய்ய முழு ஆதரவையும் அளிப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், தைவான் விடுதலைக்கு பாடுபடுவோர்கள் நெருப்புடன் விளையாடுகின்றனர் என்று சீன பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஊ கியான் எச்சரித்து உள்ளார். சீனாவிடம் இருந்து தைவான் விடுதலை பெற முயன்றால் போர் ஏற்படும் என்று பகிரங்க எச்சரிக்கையை தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

 ஜோ பிடன் உறுதி

ஜோ பிடன் உறுதி

புதிய அமெரிக்க அதிபரான ஜோ பிடன் தைவானுடனான தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டார். இந்த விஷயத்தில் டிரம்ப் கொள்கையைத்தான் பைடன் ஃபாலோ செய்ய உள்ளார். இந்த நிலையிலதான், சீனாவின் சமீபத்திய எச்சரிக்கையை "துரதிர்ஷ்டவசமானது" என்று அமெரிக்கா கூறியுள்ளது.

தைவானுக்கு சீனா பூச்சாண்டி

தைவானுக்கு சீனா பூச்சாண்டி

சீனா ஜனநாயக தைவானை பிரிந்து செல்லும் மாகாணமாகவே பார்க்கிறது, ஆனால் தைவான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாகவே பார்க்கிறது. தனி ராணுவம், தனி அரசியலமைப்பு என தைவான் தன்னை தனி நாடாகவே முன்னிலைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் போர் என்று தைவானுக்கு பூச்சாண்டி காட்டியுள்ளது சீனா.

English summary
China has warned Taiwan that any attempt to seek independence "means war".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X