For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்சீன கடலில் அமெரிக்கா போர்க்கப்பல்.. போர் தொடுக்கப் போவதாக சீனா 'வார்னிங்'

By Mathi
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: தென் சீனக் கடலில் அத்துமீறினால் போர் தொடுப்போம் என்று அமெரிக்காவுக்கு சீனாவின் கடற்படை தளபதி அட்மிரல் வூ செங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்சீனா கடற்பரப்பு முழுவதையும் சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே நாடுகளுக்கும் தென்சீனா கடசீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பா னுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

China Warns U.S. of Potential for War in South China Sea

இந்த நிலையில் தென் சீனக் கடலில் பல்வேறு பிரமாண்ட செயற்கை தீவுகளை சீனா அமைத்துள்ளது. அங்கு விமானப் படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படைத் தளம் ஆகியவற்றை சீனா உருவாக்கி வருகிறது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லார்சன் போர்க்கப்பல் தென்சீனா கடற்பரப்புக்குள் நுழைந்தது.

இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்த கண்டனத்தை அமெரிக்கா பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் சீனா கடற்படை தலைமை தளபதி அட்மிரல் வூ செங்லி, தென்சீன கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்துமீறுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்க கடற்படை, விமானப் படை தொடர்ந்து அத்துமீறினால் கடல்பரப்பு, வான் வழியாக கடுமையாக தாக்குதல் நடத்துவோம். ஒரு சிறிய சம்பவம்கூட இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார்.

இதனால் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.

English summary
China told the U.S. on Thursday that even a minor confrontation between their two militaries in the South China Sea could culminate into a larger war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X