For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உய்குர் முஸ்லீம் மசோதாவால் ஆத்திரத்தில் சீனா... எதுவும் செய்வோம்.. அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

பெய்ஜிங் : உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினரை சீனா நடத்தும் விதத்திற்கு கடுமையான பதிலடி கோரும் அமெரிக்காவின் சட்டம் இருதரப்பு ஒத்துழைப்பை பாதிக்கும் என்றும், வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளையும் இருட்டாக்குவதாகவும் சீனா அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளது.

வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உடன்படிக்கை எட்டுவதற்கு 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை ஆகலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செவ்வாய்கிழமை கூறிய நிலையில், அமெரிக்கா சீனா இடையோன வர்த்தக ஒப்பந்தத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே குறைந்துவிட்டன.

இந்த சூழ்நிலையில் சீனா உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினரை தடுப்பு முகாம்களில்அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வந்தன.

சீனா கடும் கோபம்

சீனா கடும் கோபம்

இந்நிலையில் உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினரை சீனா நடத்தும் விதத்திற்கு கடுமையான பதிலடி கோரும் அமெரிக்காவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் செனட்சபை ஒப்புதலுக்ககாக அனுப்பப்பட்ட உய்குர் சட்டம் 2019க்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்திருப்பது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையில் உறவு சரியில்லை என்ற நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.

சீனாவின் நிலைப்பாடு

சீனாவின் நிலைப்பாடு

சீனாவின் நிலைப்பாட்டை நன்கு அறிந்த வட்டாரங்கள், இந்த சட்டம், ஏற்கனவே கருத்து வேறுபாடுகளால் நிறைந்த சீனா அமெரிக்கா இடையிலான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தையும் பாதிக்கும் என்கிறார்கள்.

சீனப் பொருட்கள்

சீனப் பொருட்கள்

சீனப் பொருட்களின் மீதான புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

விளைவுளை சந்திக்கணும்

விளைவுளை சந்திக்கணும்

"சீனாவின் நலன்களைப் புண்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்போம்" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறினார். "எந்தவொரு தவறான சொல் மற்றம் செயல்களுக்கு உரிய விளைவுகளை சந்தித்தாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றும் ஹுவா சுனிங் கடுமையாக தெரிவித்துள்ளார்.

English summary
the Uighur Act of 2019 row: China warns US over Uighur bill, raising doubts over trade deal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X