For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியாக விசாரிப்போம்.. காஷ்மீர் பிரச்சனையில் 5 முக்கிய நாடுகளுடன் கை கோர்க்கும் சீனா.. ஷாக்கிங்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநாவில் உள்ள முக்கிய நாடுகளிடம் முறையிட உள்ளதாக சீனா முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக தனியாக ஆலோசிக்க அழைப்பும் விடுத்துள்ளது.

கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது பற்றி உலக நாடுகள் பெரியதாக எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இது உலக அளவில் பிரச்சனையாகி வருகிறது.

கடந்த வாரம்

கடந்த வாரம்

இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்தது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஐநாவில் மட்டுமில்லாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதேபோல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தரப்பில் இருந்து கடிதமும் அளித்துள்ளது. பாகிஸ்தானை தொடர்ந்து தற்போது சீனாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டு இருக்கிறது.

யார் இருக்கிறார்கள்

யார் இருக்கிறார்கள்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இவர்களிடம் பாகிஸ்தான் தரப்பில் புகார் அளிக்கப்பட உள்ளது. தற்போது சீனாவும் மீதம் இருக்கும் நான்கு நாடுகளிடமும் புகார் அளித்துள்ளது.

என்ன அழைப்பு

என்ன அழைப்பு

அதன்படி காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும். ஐந்து நாடுகள் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். உடனடியாக இதற்கான கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் சரியான பதில் அளிக்கவில்லை.

English summary
China writes the UN Security Council for close consultation on Kashmir Issue after Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X